வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்திற்குள் மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதற்கான முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுவரை சென்னையில் 9ஆயிரத்து 500 பேரும், காஞ்சிபுரத்தில் 3ஆயிரத்து 224 பேரும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோரி முகாம்களில் விண்ணப்பித்துள்ளதாகவும் லக்கானி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் 300 பேரும், கடலூரில் ஆயிரத்து 934 பேரும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்திருப்பதாக அவர் கூறினார். அவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் மாற்று அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.