தொப்பையை குறைக்க வழிகள்

belly_682_993157a

காதலர்கள்கூட இன்றைய சூழ்நிலையில் எளிதாக ”குட்பை” சொல்லிவிட முடிகிறது.  ஆனால் தங்களது தொப்பைக்கு ”குட்பை” சொல்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது.  எத்தனையோ பயிற்சிகள், டயட்டுகள் இருந்தும் உங்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லையா?  கவலையை விடுங்கள்.

நீங்கள் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளை மாற்றுங்கள்., மாற்று உணவாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.  நிச்சயமாக உங்கள் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.  எண்ணி பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா?  அப்படியானால் வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க…

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்

சர்க்கரைக்கு பதிலாக தேன்.

எவராலும் தடுக்க முடியாத உணவு இனிப்பு.  ஆனால் உடல் எடை என்று வந்துவிட்ட பிறகு நீங்கள் சர்க்கரையை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.  தேனை நீங்கள் மாற்று உணவாக சாப்பிடலாம். தேனை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால்கூட உடல்பருமன் குறையும் என்பது நம்ம ஊர் இயற்கை மூலிகை வைத்தியம்.

கிரீம் உணவிற்கு பதிலாக தயிர்.

ஏறக்குறைய எல்லோரிடமும் கிரீம் உணவுகள் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.  இதனால் உடல் எடை அதிகரிக்க ஒரு காரணமாய் அமைகிறது.  இதற்கு பதிலாக வீட்டில் தயாரித்த சுத்தமான தயிரை சாப்பிடலாம்.  கடைகளில் விற்கப்படும் தயிர்களில் செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் சோ்க்கப்படுகின்றன.  இதனால் உடல எடையை அதிகரிக்கச் செய்கிறது என்பதையும் மறந்து விட வேண்டாம்.

எனர்ஜி ட்ரிங்க்ஸ் மாற்றாக இளநீர்.

உடல் இயக்க சக்தியை அதிகப்படுத்துவதற்கு நமக்கு ஓர் ஊக்க பானம் தேவைப்படுகிறது.  குளிர்பானத்தில் இரசாயன கலப்பு உள்ள பூச்சி கொல்லி சோ்ந்திருக்கிறது.  குளிர்பானத்திற்கு பதிலாக இளநீர் சாப்பிடுங்கள்.  உடல் நலத்திற்கு பயனை விளைவிக்கும்.

காபிக்கு பதிலாக கிரீன் டீ

காபி அதிகமாக குடிப்பது உடலுக்கு நல்லதல்ல.  ஆனால் கிரீன் டீ உடலுக்கும் நல்லது. உடல் பருமனை குறைப்பதற்கும் உதவுகிறது.

உருளைக்கிழங்குக்கு மாற்று உணவாக சர்க்கரை வள்ளி கிழங்கு.

உருளைக் கிழங்கில் வாயுவுத் தொல்லை உடையது.  உடல் பருமனை கூட்டும் தன்மையுடையது.  ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கு கல்லீரலுக்கு பலம் சேர்க்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மைதா பிரெட்டுக்கு மாற்றாக கோதுமை பிரெட்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மைதா பிரெட் சாப்பிடக்கூடாது.  மைதா பிரெட்டில் சத்துக்கள் கிடையாது.  கோதுமை பிரெட்டில் அதிகமான நார்ச்சத்து இருக்கிறது.  உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ஐஸ்கிரீம்களுக்கு பதிலாக பழங்கள்

சுவைக்காக ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்.  பழங்களை சாப்பிடுங்கள்.  உடல் ஆரோக்கியம் பெறலாம்.  உடல் எடையை குறைக்கலாம்.

சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய்.

உடல் எடை பிரச்சினை உள்ளவர்கள் காய்கறி எண்ணெய் அல்லது சாதாரண எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள். அதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கு நன்மை பயக்கக் கூடியது. மேலும் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.