ICICI அறிமுகப்படுத்துகின்றது வாய்ஸ் பாஸ்வேர்டு

தற்போது பயன்படுத்தும் ATM Card களில் உள்ள கடவுச்சொற்களை எளிதாக திருடிவிடுகின்றனர். மேலும் ஸ்கிம்மர் மற்றும் கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு திருடியும் விடுகின்றனர். இதனால் இந்த கடவுச் சொற்களை கையாள புதுமையாக பிரபல வங்கியான ஐசிஐசிஐ நிறுவனம் கடவுச் சொற்களை குரல் மூலம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தற்போது டெபிட் கார்டுகளுக்கு கடவுச்சொற்கள் மற்றும் கேள்விக்கு பதில் சொல்லுதல் போன்றவைகளின் மூலம் கார்டுகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த ஐசிஐசிஐ வங்கியானது முதன் முறையாக வாய்ஸ் ( குரல் ) மூலம் பணப்பரிமாற்றம் செய்யுமாறு வடிவமைத்துள்ளனர்.
இந்த அமைப்பின் படி வாடிக்கையாளர் தனது பதிவு செய்த குரலையே கடவுச்சொல்லாக பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யப்படும். இந்த புதிய சேவை இப்போது இந்தியாவில் மும்மை நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Leave a Reply