” பீப் சாங் ” டென்சன் ஆனார் இளையராஜா

download

Beep Song

பொது நிகழ்ச்சியில், ‘பீப்’ பாடல் குறித்து கேள்வி கேட்ட நிருபரை, இசையமைப்பாளர் இளையராஜா திட்டியதால், சர்ச்சை எழுந்துள்ளது.வெள்ள நிவாரணம் சார்ந்த விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக, இளையராஜா பங்கேற்றார்.

அப்போது, இளையராஜாவிடம், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சிம்புவின், ‘பீப்’ பாடல் குறித்து கருத்து கேட்டார்.அதற்கு இளையராஜா, ‘உனக்கு ஏதாவது இருக்கா; நாங்க அந்த பிரச்னைக்கா இங்கே கூடியிருக்கோம்; அறிவுடன் தான் கேள்வி கேட்குகிறீயா?’ என, சரமாரியாக எதிர் கேள்வி கேட்டார்.

இதனால் நிருபர்கள் கோபமாகி, ‘இசை சம்பந்தப்பட்டது என்பதாலேயே, அந்த கேள்வியை கேட்டோம். பதில் தர விருப்பமில்லை என்றால், சொல்லி விடலாமே; அதை விடுத்து, எல்லாருமே மதிப்பு வைத்துள்ள நீங்கள், அறிவு இருக்கா என்று கேட்பதா?’ என, வாக்குவாதம் செய்தனர்.இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

One Response to ” பீப் சாங் ” டென்சன் ஆனார் இளையராஜா

  1. wpuser1 says:

    பதில் தெரிந்தால் செல்லனும். இல்லாட்டி தெரியாது-னு போகனும். அதைவிட்டுட்டு அறிவு இருக்கா -ன்னு கேட்டு தன்னை பெரிய அறிவாளி மாதிரி காட்டிகிறது சரியான செயல் இல்லை. ராஜாவுக்கு பொறுமை ரொம்ப அவசியம்!

Leave a Reply

Your email address will not be published.