குடும்பவியல் – வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வது தவறா?

5-sachin_and_anjali_tendulkar-bccl_1370235173

இந்த தலைமுறையிலும் சரி முந்தைய தலைமுறையிலும் சரி சில ஆண்கள் தன்னைவிட வயதில் இரண்டு வருடம் அல்லது அதிகபட்சமாக ஐந்து வருடம் மூத்த பெண்ணை விரும்பி கல்யாணம் செய்கின்றனர். இதன் காரணம் என்ன என்று அவர்களிடம் நடத்திய அமெரிக்க கருத்துக்கணிப்பில் வெளிவிட்டுள்ள செய்திகள் பலவும் நியாயமானதாகவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.

தன்னைவிட வயது கொஞ்சம் அதிகம் உள்ள பெண்மணிகளை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் கூறியதாவது.  நல்ல மனதுடன் மற்றும் குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பக்குவம் ஆகியவை அவர்களிடம் நம்மை விட அதிகமாக உள்ளது.

மேலும் நாம் தோல்வியில் துவண்டு விடும் போது அவர்கள் நம்மை ஆறுதல் கூறி தேற்றும் மனப்பக்குவம் உடையவர்களாக உள்ளனர்.

குடும்பத்தின் வரவு செலவுகள் எப்படி நடத்த வேண்டும் என்று பொறுப்புடன் ஒரு திட்டம் போட்டு குடும்பத்தை வழிநடத்திச் செல்வதற்கான அறிவுகளை கொண்டுள்ளனர்.

வயது அதிகமாக இருந்தாலும் அப்பெண்களுடன் நாங்கள் வெளியில் செல்லும் போது அவர்கள் அணிந்துள்ள உடையிலக்கணம் மற்றும் நடந்து கொள்ளும் விதம் எந்த வித வித்தியாசத்தையும் காட்டுவதில்லை.

குழப்பமான சூழ்நிலைகளில் கூட சரியான முடிவை எடுக்க அவர்கள் எங்களுக்கு கவுன்சிலிங் நடத்துகின்றனர்.

தான் ஏற்கனவே சென்று வந்த பாதையை நமக்கு காட்டி ஆபத்தை உணர வைக்கின்றனர்.  குடும்ப வாழ்க்கையில் உள்ள சுக துக்கங்களை வெளிப்படையாக அவர்களிடம் சொல்ல முடிகின்றது. குடும்பப்பிரச்சினைகளை முடிந்த வரை சமாளித்துவிடுகின்றனர்.

மேலும் அவர்கள் நம்மைவிட கொஞ்சம் தான் வயது அதிகம் என்பதாலும் அவர்கள் மீது அன்னியோன்யம் அதிகரிக்கின்றது. தங்களின் தேவைகளை புரிந்து கொள்கின்றனர். அவர்களின் அன்பு தாயன்பைப் போன்றது.  அனைத்தையும் அவர்களிடம் வெளிப்படையாக பேச சிறிதும் தயக்கம் ஏற்படுவதில்லை.

எங்கள் உடைகள், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் அவர்கள் நம் இஷ்டத்திற்கு விட்டு விட்டு குறைகளை தெளிவாக்குகின்றனர். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.  நாம் கோபித்துக் கொண்டால் கூட அவர்களாக வந்து நம்மை சமாதனம் செய்துவிடுகின்றனர்.

எங்களை விட வயது குறைந்தவர்கள் போதிய குடும்ப அறிவு இல்லாமல் அழகை மட்டும் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் பாதியில் அவர்களை விட சிறிய வயதினரை விரும்பி சென்று விடுகின்றனர்.

குழந்தை வளர்ப்பில் அவர்கள் நமக்கு எந்த வித தொந்தரவும் செய்வதில்லை. வீட்டில் கவனம் செலுத்த முடியாமல் சதா வேலை என்று இருக்கும் எங்களைப் போன்றவர்களை புரிந்து கொண்டு திருப்தியளிப்பதில் அவர்கள் மிகவும் பக்குவப்பட்டவர்கள்.

எவ்வளவு தான் செய்தாலும் மன நிறைவு அடையாத இளவயது பெண்களைவிட அவர்கள் எதையும் ஏற்று கொண்டு எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கின்ற மூத்தவர்கள் எவ்வளவோ தேவலாம் என்கின்றனர்.

மேலும் இக்கால ஆண்கள் யாரும் தன் பெண்களை மற்றும் குடும்பத்தை அடக்கி ஆளவேண்டும் என்ற மூர்க்க எண்ணங்கள் இல்லாதவர்கள்.  மேலும் அவர்கள் அதை விரும்பவும் இல்லை அதை சுமையாகவே கருதுகின்றனர். இதனால்  தன் பொறுப்பை மனைவி கவனிக்க அவருக்கு போதிய அறிவை எதிர்பார்க்கின்றனர் குடும்பத்தையும் தன்னையும் வழிநடத்த தன்னை விட வயதில் மூத்த பெண்களை ஆண்கள் வாழ்க்கைத்துணையாக பெற விரும்புகின்றனர்.

அதே சமயம் பெண்களும் தன்னைவிட வயதில் குறைந்த ஆண்களையே விரும்புகின்றனர் என்பது தான் ஆச்சரியம். இதைப்பற்றி பெண்கள் கூறியது அரவணைப்பு, அன்பு, பாசம் ஆகியவை வயதில் மூத்தவர்களை விட இளையவர்கள் எங்களிடம் அதிகமாகவே காட்டுகின்றனர்.  வயது மூத்தவர்கள் எங்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்கின்றனர்.

மேலும் சச்சின் டென்டுல்கர் போன்ற பெரிய பெரிய ஆட்கள் கூட வயது மூத்தப் பெண்ணையே திருமணம் செய்து வருகின்றனர்.   தன்னைவிட வயது அதிகமாக உள்ள பெண்ணை தடையின்றி திருமணம் செய்யலாம் என்று  மார்க்கமே கூறுகின்றது  இதில் எந்த தவறும் கிடையாது.

 உண்மைதான் ”குழம்பில் ஏண்டி உப்பு அதிகமாக போட்டாய்” என்று கேட்டாலே உடனே அம்மா வீட்டுக்கு பெட்டியைத் தூக்கும் இளவயது பெண்களை விட நம்மையும் சமாளிக்கும் முத்தவயது பெண்கள் தேவலதான். எவ்வளவு சிறிய வயதானாலும் என் அக்கா பெண்ணை தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் ( மாமன்களுக்கு ) ஆண்களுக்கு கண்டிப்பாக இதைப்பகிரவும் திருந்திவிடுவார்கள்.

One Response to குடும்பவியல் – வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வது தவறா?

  1. Muthu veeramuthu says:

    எனக்கும் அக்கா பொண்ணு 3வயது மூத்த பெண் …சந்தேகம் முடிந்தது

Leave a Reply

Your email address will not be published.