தேனை எப்படியெல்லாம் எடுத்து வந்தால் உடல் எடை குறையும்?

honey

உடல் எடையைக் குறைப்பது அவ்வளவு ஈசியான காரியம் அல்ல.  கடைகளில் எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன.  அந்த மருந்துகளினால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ பக்க விளைவுகளைத்தான் நாம் சந்திக்கிறோம்.  எனவே நாம் இயற்கை வழிகளை கடைப்பிடிப்பதுதான் நல்லது.  3 நாளில் தொந்தியின் அளவை குறைக்க உதவும் ஒர் அற்பதமான ஜுிஸ் ஒன்று உள்ளது.  அது தான் தேன்.  தேன் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருள்.  இதனைக் கொண்டு உடல் எடையை குறைக்கலாம்.  நாம் இயற்கை வழிகளை கடைபிடிக்கும் பொழுது தாமதமாகத்தான் நன்மைகள் கிடைக்கும்.  ஆனால் அது நன்மையானதும் நிரந்தர மானதும் கூட.  இரவு தூங்கும் பொழுது தேனைக் குடிச்சா தொந்தி குறையுமாம்! சரி! எப்படி தேனைக் கொண்டு உடல் எடையைக் குறைக்கலாம் என்று எல்லோரும் கேட்கலாம்.  அதற்கென்று சில வழிகள் உள்ளன.  அந்த வழிகளைப் பின்பற்றி தேனை சாப்பிட்டு வந்தால் கட்டாயம் உடல் எடையை குறைக்க முடியும்.  இப்போது தேனைக் கொண்டு உடல் எடையை எப்படி கம்மி பண்ணுவது என்று பார்ப்போம்.

தேனைக் கொண்டு உடல் எடையைக் குறைப்பது எப்படி?

ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத்தூளை ஒன்றாக கலந்து சாப்பிடுங்கள்.  மற்றும் டீ மூலமும் சாப்பிடுங்கள்.  இதனால் ஜீரணம் சீராக நடைபெறும். மற்றும் உடலிலுள்ள மெட்டபாலிசம் அதிகரிக்கிறது.  இதனால் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கிறது.  தேன்பட்டை மற்றும் தேன் கொண்டு செய்யப்படும் டீயை சாப்பிடுங்கள். கொழுப்புக்கள் கரைந்து போகும்.

திரிபாலா.

தேன் திரிபாலா மற்றும் திரிபாலா என்பது ஒரு ஆயுர்வேத மருந்து.  இந்த மருந்து ஜீரணத்தை எளிதாக்குகிறது.  கழிவுகளை வெளியேற்றுகிறது.  பருமனை குறைக்க உதவுகிறது.  திரிபாலாவை தேனுடன் கலந்து சாப்பிடும்போது உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து. பருமன் குறைய ஆரம்பிக்கிறது.  1 ஸ்பூன் திரிபாலாவை தண்ணீரில் இரவு முழுவதும் நனைய வைத்து, அடுத்தநாள் காலையில் அதில் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் நல்ல பயனைத் தரும்.

வேப்பம்பூ.

வேப்பம்பூவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் சீக்கிரம் குறையும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வேப்பம் புவை தட்டி, அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பான பயனைக் காணலாம்.  தேன் மற்றும் வேப்பம்பூ மிகச் சிறந்த நோய் நிவாரணி.

ரோஜாப்பூ மற்றும் தேன்.

ஆச்சர்யம்! ஆனால் உண்மை.  ரோஜாப்பூவின் இதழை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.  அதற்கு கடைபிடிக்க வேண்டியவை.  கொஞ்சம் ரோஜாப்பூ இதழை தண்ணீரில் போட்டு சுடவைத்து, அந்த நீரை வடிகட்டி, அதில் தேன் சோ்த்து தினந்தோறும் ஒருமுறை குடிக்க வேண்டும்.  இப்படி ரோஜாப்பூ இதழை டீ போட்டு குடித்தாலும் உடல் பருமனைக் குறைக்கலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை

இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினந்தோறும் குடித்து வரவேண்டும்.  இந்த கலவையை எடுத்துக் கொண்டால் ஜீரணம் எளிதில் உண்டாகிறது.  உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேற்றப்படுகிறது. மிகச் சிறந்த இந்த பானம் உடல் எடையை குறைக்கச் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.