வயிறு உப்புசத்தால் வயிற்று வலியா?

download

நம்மில் பலருக்கு ஒரு நல்ல பழக்கம் உள்ளது அது வேலையை முடித்துவிட்டு தான் கையை நனைப்பேன் என்பது ஆனால் அவர்களுக்கு  ஓரு கெட்ட பழக்கமும்  உள்ளது அது வேலை முடித்துவிட்டு பசியில் காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதைபோல் சாப்பாட்டை ஒரு பிடி பார்த்துவிட்டு தொப்பை சரிய மயங்கி தூங்குவது.  இது வயிற்றை உப்ப வைத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வைத்துவிடும்.

இந்த வயிறு உப்புசத்தால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். வயிற்றில் ஒரு வித பிசைகின்ற வலியானது தோன்றும்.  இந்த வலி ஏற்பட காரணம் பசியுடன் இருந்த வயிறு அல்லது சீரணமாகாத உணவுகளை கொண்டுள்ள வயிற்றில் திடீரென்று மீண்டும் உணவுகள் உள்ளே செல்வதுதான்.

இதனால் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம், வாயுத்தொல்லைகள் போன்றவைகள் வரும்.  அதிகமான இறைச்சிகள் மற்றும் அதிகமான அளவு மைதா பரோட்டா போன்றவைகளை உண்ணும் போதும் அவை வயிற்றில் செரிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் வரை வயிற்றில் வலி உணர்வு இருந்து கொண்டேதான் இருக்கும்.

அதை தவிர்க்க சில வழிகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

1.சீரணம் ஒரு டீ ஸ்பூன் மற்றும 5 மிளகுகளை எடுத்துக்கொண்டு வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும்.

2.கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலா சூரணத்தை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் விழுங்கவும்.

3. உப்புசம் ஏற்பட்டால் இஞ்சியை அம்மியில் இடித்து கொதிக்கும் நீரில் போட்டு காயவைத்து அதில் சிறிது சர்க்கரை சேர்த்து சூட்டோடு குடிக்கவும்.

4.வாயுத்தொல்லைகள் உ.கிழங்கு சாப்பிட்டவுடன் ஏற்பட்டால் சமையல் அறையில் உள்ள பூண்டை எடுத்து பல் போட்டு இரண்டு பல்லை ஒரு டீ ஸ்பூன் சீரகத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்.

5.சாப்பிட்டு வெகுநேரம் ஆகியும் சீரணமாகாமல் இருந்தால் உப்புசம் ஏற்பட்டால் உடனே தண்ணீரை எடுத்து நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகத்தை அம்மியில் நசுக்கி போடவேண்டும் பின் அந்த தண்ணீரை அருந்த வேண்டும்.

6.சோடா பானத்தில் எலுமிச்சை சாற்றைக் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள உப்புசம் குறையும்.

7.சாப்பிட்டுவிட்டு உறங்காமல் ஒரு பத்து நிமிடம் காலாற நடக்கவேண்டும். அல்லது நின்று கொண்டு கால்களை மாற்றி மாற்றி வைக்கவேண்டும்.  இதனால் சீரண உறுப்புகள் வேலை செய்ய நேரம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.