உணவுகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவது நல்லதா

stinkyBonzai__1349102132_9128

வேகமான இந்த உலக வாழ்க்கையில் தினமும் நம்மால் உணவுப்பொருட்களை சமைத்து உண்ண நேரமும் இல்லை உடலும் ஒத்துழைக்க மாட்டேன் என்கின்றது.

உண்மையில் உணவுகளை தினமும் புதிதாக செய்து சாப்பிடுவது தான் நல்லது. எனினும், ஜங்க் புட்களோ அல்லது நேற்று வைத்த குழம்பை இன்று பயன்படுத்துவது இன்று காலையில் வைத்த சாம்பாரை நாளை பயன்படுத்துவது என்று வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். ஒரு உணவுப்பொருள் முதல் முறை சமைக்கப்படும் போதேஅதன் சத்துக்கள் பாதி வீணாகிவிடும்.  மீண்டும் மீண்டும் அது சூடேற்றப்படும் போது எப்படி அது உடலுக்கு சத்துள்ளதாக இருக்கும்?  பிரிட்ஜ் கண்டுபிடித்ததே இந்த பழைய குழம்புகளையும் சாம்பார்களையும் பாதுகாக்கத்தானா?

இதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறியது மற்றும் அவர்களின் சில உணவுப்பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

1. இறைச்சி வகை உணவுப்பொருட்கள் உயிருடன் வெட்டப்பட்டதில் இருந்து 12 மணி நேரம் தான் சத்துடன் இருக்கும்.  பிறகு அதில் உள்ள எண்ணெய்  மீண்டும் மீண்டும் சமைக்கப்படும் போது விஷமாக மாறிவிடுகின்றது.

2. முட்டைகளை வறுவல் அல்லது ஆஃபாயில் வறுவல் ஆகியவை போட்டு சாப்பிடுவதை விட, முட்டைகளை வேகவைத்து சாப்பிடுவது தான் நல்லது.   இதனால் முட்டையின் முழுச் சத்துக்களும், வேக வைத்த முட்டையில் இருக்கும்.

3. கீரை வகை உணவுகள் உயிர்ச் சத்துக்கள் நிறைந்தது.  இந்த கீரைவகைகளை அப்படியே சாலட் செய்து சாப்பிடுவது நல்லது. கீரைககளை பெரும்பாலும் மதிய வேளையில் மட்டும் சாப்பிடுவது தான் நல்லது.  இந்த கீரைகள் திரும்ப திரும்ப சூடுபடுத்தி சாப்பிட்டால் மேலும் சுண்டிவிடும். இது புற்று நோயை உருவாக்கும்.

4. காளான்கள் மற்றும் உருளைக்கிழங்குகள், கடற்சிப்பிகள், மீன்கள் ஆகியவைகளை மீண்டும் மீண்டும் சூடேற்றுதல் கூடாது.  இதில் உள்ள கொழுப்புகள் வேதிவினையால் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடுகின்றது.

இனிமேலாவது பிரட்ஜ்க்குள் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் மட்டும் வைத்து தினமும் சமைத்து சாப்பிடுங்கள். புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற கொடிய நோய்களை உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்!

Leave a Reply

Your email address will not be published.