டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி கொடூர பலாத்காரம் – அவர் நினைவு நாளில் தாயார் பெண்ணின் பெயர் சொல்லி கதறல்

download

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கி கற்பழித்த சம்பவம் நடந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. கற்பழிப்பு சம்பவம் நடந்த பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளுக்கு உயர் நீதி மன்றம் மரண தண்டனை கொடுத்துள்ளது.

பெற்றோரின் அனுமதி மற்றும் பெண்ணின் தனிப்பட்ட விசயங்களால் அவரது பெயர் முழுமையாக வெளிவராமல் இருந்தது.  பெண்ணின் தாயார் அவரின் பெயரை பெண்ணின் மூன்றாவது நினைவு நாளில் கதறி வெளிப்படுத்தினார்.  அவர் பெயர் ஜோதி சிங்.

Delhi16deca--621x414

இது போன்ற கொடுமைகள் எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது.  இவர்களை கொன்று விட வேண்டும் என்று தாயார் கதறினார்.

1 (1)

கைதான ஆறு குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் இறந்தார். ஒரு மைனர் குற்றவாளிக்கு 3 வருடம் சிறை தண்டனை கொடுத்துள்ளது.  மேலும் நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி மைனர் குற்றவாளி விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.  இது  ஜோதியின் பெற்றோரை (ஆஷா தேவி- பத்ரிநாத் ) மேலும் துக்கமடையச் செய்துள்ளது. கொடூர உள்ளம் கொண்ட அந்தச் சிறுவன் எப்படி நல்ல மனதுடன் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் இருப்பான் என்று கேட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.