கோபத்தால் கண்முன்னாடியே மொத்த குடும்பமும் அழிந்தது

images

கோபம் குலத்தையே அழித்துவிடும் என்ற பழமொழி ஒன்றை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஒரு குடும்ப தலைவர் கொண்ட கோபத்தால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது.  பாண்டியன் என்பவர் சென்னையின் நீலாங்கரையைச் சேர்ந்தவர்.  இவர் சென்னையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

இவர் தனது மனைவி வெண்ணிலா மற்றும் இரண்டு மகள்கள் ரம்யா, பவித்ரா ஆகியவர்களுடன் சென்னை திருவான்மியூருக்கு படம் பார்க்க சென்றுவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.  காரில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் கொட்டிவாக்கத்திற்கு காரை திருப்பி ஓட்டி வந்துள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று காரின் பின் பகுதியில் மோதியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் கோபப்பட்டு பேருந்து ஓட்டுநரை திட்டுவதற்காக இறங்கினார்.  ஆனால் காரில் உள்ள ஹேன்ட் பிரேக்கை போட மறந்துவிட்டால் சாலையோரத்தில் உள்ள ஒரு குளத்தில் கார் தானாக சென்று மூழ்கிவிட்டது.  பாண்டியன் பேருந்து ஓட்டுநரை உதவிகேட்டு பதறியுள்ளனர்.  பேருந்து ஓட்டுநர் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார்.

காருக்குள் இருந்து மகள்கள் மற்றும் மனைவி நீரில் மூழ்கி இறந்தனர். காரை அக்கம்பக்கத்தினர் வந்து சாலைக்கு இழுத்தனர். தன் ஆத்திரத்தால் தன் குடும்பத்தை இழந்து கதறியது கொடுமையான செயல்.

Leave a Reply

Your email address will not be published.