உயர்நீதிமன்றம் உத்தரவு உடனடியாக சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்

Madras-HC-sign-2_0_3_0-2_0_0

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு சென்னையை உருகுலைத்துவிட்டது.  மேலும் வந்த வெள்ளம் தனது பாதையை காட்டிவிட்டும் சென்று விட்டது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் மறைக்கப்பட்டு வீடுகளாக மாறியது அம்பலமானது.

இந்த சென்னையில் இதை பொதுநல வழக்காக தொடரப்பட்டு ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது.  இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவாக உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  மேலும் குப்பைகள் திடக்கழிவுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.

Flood Alert

இதையடுத்து ஒரு மாதத்திற்குள் அரசின் பதில் மனுவை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.கே கவுல் மற்றும் சத்தியநாரயணர் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.  இதன்படி அரசு இனி ஆக்கிரமிப்புகளை வெகு விரைவாக அகற்ற ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.