தூக்கத்தில் வெளியேறும் விந்து

male

இரவில் தூக்கத்தின்போது தானாக விந்து வெளியேறுவது ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று.  அதில் பலரும் தவறாக நினைப்பது எப்போதும் உடலுறவு எண்ணத்துடன் இருப்பது என்று.  ஆனால் உண்மையில் அப்படியல்ல.  இது அதிகமான உடல்சூடு, உடுத்தும் உடை, தூக்கமின்மை, உண்ணும் உணவுகள், தூங்கும்நிலை, சுயஇன்பம் காணாமல் இருப்பது போன்றவற்றில்தான் நிகழ்கிறது.

எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமான ஆண்கள் தன் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது இப்பிரச்சினையை சந்தித்திருக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப் பிரச்சினை அதிகமானால், அதனை சரி செய்ய சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன.  அவற்றை பின்பற்றி வந்தால், தூக்கத்தின் போது படுக்கையில் விந்து வெளிவருவதை தடுக்கலாம்.  விறைப்புத் தன்மை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சரி. இப்போது தூக்கத்தின் போது படுக்கையில் தானாக விந்து வெளிவருவதை தடுக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

1.தூங்கும் நிலை.

தூங்கும் பொழுது சில ஆண்களுக்கு விந்து வெளியேறும்.  குப்புறப்படுக்கும் போது படுக்கையில் ஆண்குறி உராய்ந்தால் விந்து வெளியேறுகிறது.  எனவே ஆண்கள் இந்த நிலையைத் தவிர்க்க பக்கவாட்டில் இடது அல்லது வலது புறத்தில் மல்லாந்து படுக்க வேண்டும்.

2.உணவு வகைகள்.

ஆண்கள் அதிகமான கார உணவு வகைகளை உட்கொண்டாலும், இரவில் தூக்கத்தில் விந்து வெளியேறும்.  இப்பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் இராத்திரி நேரத்தில் காரமான உணவுகள் சாப்பிடுவதை நீக்குவது நல்லது.

3.உடற்பயிற்சி.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வாருங்கள். மன அழுத்தம் குறையும்.  இதனால் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, இரவில் படுக்கையில் தானாக விந்து வருவது குணமாகும்.

4.சேஜ் டீ.                                                                             தானாக விந்து வெளிவருவதற்கு சேஜ் என்னும் மூலிகை நல்ல பயனைத் தருகிறது .  இந்த மூலிகையை மிதமான சுடுநீரில் கலந்து தேநீர் தயாரித்து இரவு உணவிற்கு பின் குடித்தல் வேண்டும்.  இது இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு உதவுகிறது.

5.வெந்தயம் மற்றும் தேன்.

ஒரு கப் டீயில் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.  தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அடிக்கடி படுக்கையில் விந்து வெளிவரும் பிரச்சனையை தீர்க்கலாம்.

6.அதிமதுரம்.

அதிமதுரம் கொண்டு தேநீர் தயாரித்து சாப்பிட்டுவர, அதில் உள்ள பொருள், அதிகமாக உற்பத்தியாகும் விந்தணுவை கட்டுப்படுத்தி இரவில் படுக்கையில் ஏற்படும் விந்தணு வெளியேற்ற பிரச்சனையை தடுக்கிறது.

7.பூண்டு

அல்லிசின் என்னும் பொருள் பூண்டில் உள்ளது.  இது இதயத்தை உறுதியாக்குகிறது.  ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.  விந்து தானாக வெளியேறுவதை தடுக்கிறது.  எனவே பூண்டு சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது.

8.தயிர்

1 டேபின் ஸ்பூன் தயிரை சாப்பிடுங்கள்.  தினந்தோறும் இரவில் படுக்க போவதற்கு முன்பு 1 டேபிள் ஸ்பூன் தயிரை சாப்பிட்டு வாருங்கள். இது விந்து வெளியேற்ற பிரச்சனையை தடுக்கிறது.  செரிமானத்தை சீராக்குகிறது.  நல்ல தூக்கத்தை தருகிறது.  தயிர் ஒரு மிகச் சிறப்பான இயற்கை நிவாரணி.

9.நெல்லிக்காய்.

நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.  நெல்லிக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடென்ட் இரவில் தானாக விந்து வெளி வருவதை தடுக்கிறது.

10.வெங்காயம்.

வெங்காயத்தில் அசிட்டிக் என்ற பொருள் உள்ளது.  இது தானாக விந்து வெியேறுவதை தடுக்கிறது.  வெங்காயத்தை பச்சையாகக் கூட சாப்பிடலாம்.

11.சிவப்பு பழங்கள்

சிவப்பு பழங்கள் குறிப்பாக செர்ரிப் பழங்கள், மாதுளை, ஆப்பிள் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளது.  இது அதிகமாக விந்தணு உற்பத்தியாவதை தடுக்கிறது.  இதனால் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்தணு வெளியேறுவது தடுக்கப்படுகிறது.  ஆண்களின் பல பிரச்சினைகளுக்கு சிகப்பு பழங்கள் நல்ல தீர்வைத் தருகின்றன.

12.உடல்வெப்பத்தை தூண்டக்கூடீய பழங்கள்.

இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவதை தடுக்க உடல்வெப்பத்தை தூண்டக்கூடீய பழங்களான பப்பாளி, அன்னாசி, அவகேடா பழம், மாம்பழம் போன்றவற்றை இரவு நேரத்தில் தவிர்த்தல் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.