லேப்டாப்பை கூலாக வைத்துக்கொள்ளுங்கள்

download

பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணினியின் பங்கு இன்றியமையாதது.  கணினிகளை வாங்கி பயன்படுத்திவிட்டு வேலை முடிந்தப்பின்பு அப்படியே செக்ன்ட் ஹேன்டில் விற்றுவிட்டு புது கம்ப்யூட்டர் வாங்கிவிடுகின்றனர்.

ஆனால் பெரிய நிறுவனங்கள் மற்றும் டிசைனிங் கம்பெனிகளில் தான் கணினிகளின் உண்மையான வேலை தேவைப்படுகின்றது.  அதிக சக்திவாய்ந்த கிராபிக்ஸ் கார்டுகள், பிராஸஸர்கள், ரேம்கள் என்று எல்லாமே அதிகம் தான்.  மேலும் காலையில் ஆன் செய்யப்படும் கணினிகள் இரவு வீடு திரும்பும் போது தான் நிறுத்தப்படுகின்றது.

மேலும் சில கணினிகளில் நிறுத்தப்படுவதே கிடையாது ஷிப்ட் மாற்றி வேலை நடந்து கொண்டே தான் இருக்கும்.  இப்போது பல நிறுவனங்களில் இடப்பற்றாக்குறை மற்றும் UPS பிரச்சினைகளால் Desktop கம்ப்யூட்டர்களை விட லேப்டாப் கம்ப்யூட்டர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.  ஆனால் இந்த கணினிகளை பயன்படுத்தும் போது வெப்பம் அதிகரிக்கின்றது. இதனால் கணினி வேகமாக பழுதடைந்து விடுகின்றது.

இந்த கணினிக்கு முக்கிய பாதுகாப்பே வெப்பத்தில் இருந்து தான் இந்த லேப்டாப்பை பாதுகாக்க வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. லேப்டாப் கணினிகளில் AC mode ல் அதிவேகமாக Fan  சுழலும். இதனால் அதிக அளவில் வெப்பம் வெளியேற்றப்படும். ஆனால் Battery mode ல் குறைவான வேகத்தில் தான் சுழலும். இதனால் Battery Setting மாற்றிவைத்து Fan யை வேகமாக வைத்துவிடவேண்டும்.

2. லேப்டாப் கணினியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மேலும் ஒரு பேன் வைத்து கூலிங் பேடுகள் வந்து விட்டது. இந்த கூலிங் பேடுகள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு Fan களை கொண்டிருக்கும். இது வெப்பத்தை வெளியேற்றும்.

3. லேப்டாப் கணினியை ஒரு முட்டை அட்டையின் மேல் வைத்தால் அடியில் காற்று நன்றாக நுழைந்து வெப்பத்தை வெளியேற்றும்.

4. மேலும் அறையில் குளிர்சாதன வசதி மற்றும் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

5. வெகுநேரம் வேலை இருந்தால் கணினியை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை  ஆப் செய்து விட்டு ஐந்து நிமிடம் இடைவேளை விட்டு மீண்டும் ஆன் செய்து ஆரம்பிக்கலாம்.  Shutdown செய்ய நிறைய Application களை Close செய்ய வேண்டியிருக்கும் அதனால் Hibernate செய்து விடலாம்.  Hibernate என்பது அப்படியே கணினி கடைசியில் இருந்தவாறு மீண்டும் ஆன் செய்கையில் இருக்கும்.

6. ஆன் செய்வதற்கு முன்னர் கணினியை நன்றாக துடைத்துவிட்டு கிளீன் செய்தப்பின்னர் ஆன் செய்யவேண்டும் அதிக தூசுக்கள் இருந்தால் வெப்பம் அதிகமாகும்.

7. AC -BATTERY என்று மாற்றி மாற்றி லேப்டாப்பை பயன்படுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published.