ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் நிற்க பிளாக் தீமை பயன்படுத்துங்கள்.

download

பொதுவாக ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் உள்ளது.  அதில் ஆன்டிராய்டு போன்களுக்கு அதிக சந்தை மதிப்பு இருந்தாலும் இதன் பெரிய மைனஸ் பாயின்ட் என்னவென்றால் இதன் பேட்டரி நிற்கும் கால அளவு மிகக் குறைவு.  தொடர்ந்து சாட்டிங் அல்லது வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்தால் அதன் பேட்டரி நான்கு மணிநேரத்தில் குறைந்துவிடுகின்றது.

இதற்கு காரணம் ஆன்டிராய்டு இயங்குதளம் ஆனது இயங்க 1.5Ghz  பிராஸஸர் மற்றும் 2 GB RAM ஆகியவை ஒர்க் ஆக 4.5V தேவைப்படுகின்றது.  இது ஒரு லேப்டாப் இயங்குவதற்கு சமமாகும். ஒரு லேப்டாப்பினை ஆன் செய்து ஒர்க் செய்யும் நேரம்தான் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன்களும் இயங்குகின்றது. இதனால் தான் பேட்டரி குறைகின்றது.

Samsung-battery-life.

சராசரியாக ஒரு பேட்டரி ஒரு நாள் மற்றும் 5 மணிநேரம் தாங்குகின்றது ( அதுவும் சைலன்ட் மூடில் ).  இந்த பேட்டரி பிரச்சினையை தீர்க்க பேட்டரியின் அளவை அதிகப்படுத்திக்கொண்டே போகின்றன.  ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு அளவில் பேட்டரியை தயாரிக்கின்றது.  3500 mAh பேட்டரி எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் பேட்டரி பிரச்சினை தற்காலிகமாக தீர்கின்றதே தவிர முழுவதும் தீர வில்லை.

இந்த பேட்டரி பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும் நாம் நம்மால் முடிந்த வரை நம் பேட்டரி லைப்பை அதிகப்படுத்தலாம்.  பொதுவாக எல்லோருடைய செல்லும் LED ஸ்கிரீன் தான் உள்ளது. இந்த LED ஸ்கிரீன் கொஞ்சம் அதிகமாக பயன்படுத்தினாலும் மின்சாரத்தை குறைவாகவே செலவழிக்கும்.  பொதுவாக வால்பேப்பர் மற்றும் தீம்களை கலர் கலராக வைப்பதுதான் நம் வாடிக்கை ஆனால் கருப்பு நிறமாக வைத்தால் அந்த கருப்பு நிறத்தை காண்பிக்க எந்த வித மின்னாற்றலும் ஆன்டிராய்டு  LED க்கு தேவைப்படுவது கிடையாது.

இதனால் பேட்டரியின் ஆயுளை 8 சதவீதம் அதிகரிக்கலாம்.  எனவே உங்களுக்கு பிடித்த பிளாக் அல்லது டார்க் கலர் தீமை செலக்ட் செய்து வைத்துவிடுங்கள்….

Leave a Reply

Your email address will not be published.