விண்வெளியில் மர்ம புகைப்படம் நாசா முற்றுப் புள்ளி வைத்தது

08-1449566963-8

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறைய தகவல்களை விண்வெளிப்பற்றி வெளிவிட்டுக் கொண்டிருக்கின்றது.  அந்த வகையில் விண்வெளியில் நிலவில் ஒரு மர்மமான வெடிப்பு போன்ற புகைப்படத்தை வெளிவிட்டது.

இது ஏலியன்கள் ( வேற்றுக்கிரகவாசிகள் ) விண்கலமாக இருக்கலாம் என்ற பெரும் ஆர்வத்தோடு ஆராய்ச்சியில் இறங்கினர்.  இந்த புகைப்படம் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உணர்த்தும் புகைப்படமாக எடுத்துக் கொண்டு வேற்றுக்கிரகவாசிகளை தேடும் ஆராய்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.

08-1449566949-7

Apollo 16

ஆனால் நாசாவின் ஆராய்ச்சியில் அந்த வெடிப்பானது வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலம் அல்ல அது அப்பல்லோ 16 என்ற செயற்கைக் கோளின் வெடிப்பு என்று கண்டறிந்துள்ளனர்.  அப்பல்லோ 16 என்ற செயற்கைக் கோள் சுற்றி திரிந்து தகவல்களை புவிக்கு அளித்துக்கொண்டே இருந்தது.  ஆனால் செயற்கைக் கோள் வெடிக்கும் போது அதன் தொலை தொடர்பு சாதனங்கள் செயல் இழந்து தகவலை புவிக்கு அனுப்பவில்லை.

இதற்கு முன்னர் அனுப்பிய அப்பல்லோ 13, 14, 15 மற்றும் 17 ஆகியவைகள் வெடித்துச் சிதறிய தகவல்கள் கிடைத்தன ஆனால் அப்பல்லோ 16 மட்டும் கிடைக்கவேயில்லை. இதனால் இதை தேடும் பணியில் நாசா ஈடுபட்டிருந்தது.  இதை தேடிக்கொண்டிருக்கையில் இந்த மர்ம வெடிப்பின் அருகில் அப்பல்லோ 16 ன் உதிரிபாகங்கள் கிடந்துள்ளன.

இந்த வெடிப்புக்குள்ளானது அப்பல்லோ 16 தான் என்று திட்டவட்டமாக நாசா கூறியது. நாசா இந்த வாறு கூறியது வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.  எப்படியோ அந்த மர்ம புகைப்படம் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் இல்லை என்று தெளிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.