தேகத்தின் முடி வளர்ச்சி உடல்நலத்தைக் குறிக்கும்.

well men hair

 

தாடி, தலைமுடி, மீசை போன்ற இடங்களில் எல்லோருக்கும் ஓரெ மாதிரியான முடி வளர்ச்சி இருந்தாலும். தேகத்தில் ஒருவருக்கு மயிர் அடர்த்தியாக இருக்கும்.  சிலருக்கு குறைவாக இருக்கும்.  மிகச் சிலருக்கு உடம்பில் முடியின் வளர்ச்சியே இருக்காது.  இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?  உங்கள் உடம்பின் முடி வளர்ச்சியை வைத்து, உங்களது உடல்நலனை பற்றி கூறமுடியும்.  உடம்பில் உள்ள முடிகளின் வளர்ச்சி மற்றும் குறைபாட்டிற்கு உங்களது உடல்நலம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.  இனி உடம்பின் முடி வளர்ச்சி, உங்கள் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

  1. ஆட்டோ இம்யூன் பிரச்சனை(Autoimmune)

இது மிகவும் அபூர்வமாக ஏற்படும் ஒரு பிரச்சினை ஆகும்.  மயிர்கால்களின் பலம் குறைந்தால், தலை,புருவம், உடற்பாகங்களில் முடிகள் தானாக கொட்ட ஆரம்பித்து விடும்.  ஏன் கண் இமைகளின் மயிர்கள் கூட முழுவதுமாய் கொட்டும் வாய்ப்புக்கள் இருக்கிறது.  திட்டமிடப்பட்ட ஸ்டீராய்டுகளின் சிகிச்சையின் மூலமாக மறுபடியும் முடியை வளர வைக்க முடியும்.

  1. ஹார்மோன் சமநிலையின்மை

ஆண், பெண் இருவருக்கும் எதிர் பாலினத்தின் ஹார்மோன்கள் குறைவான சதவீதம் இருக்கும்.  இந்த எதிர்பாலின சதவீதம் தானாக அதிகரிக்கும் போது, பெண்களுக்கு மேல்உதடு, கண்ணம், தாடை போன்ற பகுதிகளில் லேசாக முடியில் வளர்ச்சி தென்படும்.  இல்லையேல் முடி உதிரும் பிரச்சினை கூட ஏற்படலாம்.  இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை தான் காரணமாகும்.  ஆண், பெண் இருவருக்கும்  தேக வளர்ச்சி வெவ்வேறு வகை மரபணுவில் இருக்கும்.  இதில் மாறுதல் ஏற்படுவதால்தான், இப்படிப்பட்ட கேச பிரச்சினைகள் வருகிறது.

  1. கருப்பை பரிசோதனை அவசியம்.

மாதவிடாய் நாள் தள்ளி போகும் பிரச்சனையோடு முடி உதிரும் பிரச்சனையும் இருந்தால் கருப்பை பரிசோதனை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.  கருப்பையின் வளர்ச்சியால் பல்பையுரு கருப்பை நோய்க்குறிக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  1. உடலில் கட்டி.

திடீரென அதாவது குறைந்தது 6 மாத காலத்திற்குள் அதிகமான முடி உதிரும் பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் உடலில் கட்டி உருவாகியிருக்கலாம் என்பதற்கான அறிகுறி.  எனவே, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  எதுவாக இருந்தாலும், மதலில் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

5 இரும்புச்சத்து குறைபாடு.

தைராய்டு பிரச்சனை அனைவருக்கும் கால நிலைக்கு ஏற்ப முடி கொட்டுதலும், வளர்தலும் ஒரு சுழற்சி முறையில் இருக்கும். ஆனால் கவனிததுப் பார்க்கும் அளவு,, உங்கள் தலையிலோ, உடம்பிலோ அளவுக்கு அதிகமான முடி கொட்டுதல் இருந்தால் ஒன்று இரும்புச்சத்து குறைப்பாடாக இருக்க வேண்டும். அல்லது தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்க வேண்டும்.  பெண்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும்போது இவ்வாறான முடி கொட்டுவது ஏற்படலாம். எனவே டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    6.தீயப் பழக்கங்கள்.

சில மதுபான பொருட்களில் இருக்கும் மூலப் பொருட்கள் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும் திறன் கொண்டதாகும்.  இதனால் முடி உதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

    7. பரம்பரை மரபணு.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு தனி மனிதனின்  பரம்பரை மரபணுதான்.  அவரவர்களின் தாடி, முகம், அக்குள் மற்றும் மற்ற உடல் பகுதிகளில் முடீயின் அடர்த்தி மற்றும் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published.