இனிமேல் பணத்தில் கிறுக்கினால் செல்லாதா?

scan0001

நம்மவர்கள் தன் கையெழுத்து மற்றும் விரும்பியவர்களின் பெயரை எழுதி பணத்தில் வைப்பது மற்றும் தன் கவிதை (?) திறனையெல்லாம்  பணத்தில் காட்டுவது.  அழகான (?) படத்தை வரைவது என்று பணத்தில் என்ன என்னமோ செய்வது இதையெல்லாம் பிழைப்பாக ஒரு கும்பல் செய்து வருகின்றது.

சமீப காலமாக அனைத்து சமூக வலைதளத்திலும் ஒரு செய்தி காட்டுத் தீ போல பரவி வருகின்றது. அந்த செய்தி என்னவென்றால் கையெழுத்துக்கள் மற்றும் பெயர்கள் அல்லது ஏதாவது பணத்தில் கிறுக்கியிருந்தால் அந்த பணம் செல்லாது என்று.

இதனால் காய்கறிக்காரர் முதல் கன்டக்டர் வரை அனைவரும் கிறுக்கிய பணத்தை வாங்கும் போது ”செல்லாது செல்லாது வேறு பணம் தா” முட்டி மோதிக்கொள்கின்றனர்.  அல்லது அப்படி கிறுக்கிய பணம் உங்களிடம் வந்துவிட்டால் நெஞ்சில் பதை பதைப்புடன் செல்லுமா செல்லாதா என்று நினைத்து நினைத்து வருத்தப்படுவீர்கள்.  அதெல்லாம் இனிமேல் வேண்டாம்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ” ரகுராம் ராஜன்” அவர்கள் அவ்வாறு கிறுக்கிய பணங்கள் செல்லும்.  இது தேவையற்ற வதந்தி.  ஆனால் பணத்தில் கிறுக்குவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.

அதான் கவர்னரே சொல்லிட்டாரே அப்பறம் என்ன என்று பேனாவை எடுத்து கோலம் போட வேண்டாம். அவ்வாறு எழுதிய பணம் ஏடிஎம் இயந்திரத்தில் Deposite  செய்யும் போது செல்லாமல் போக வாய்ப்புண்டு.  அதிகமாக கிறுக்கிய பணம் கண்டிப்பாக ஏடிஎம் இயந்திரம் நிராகரித்து விடும். அதனால் இனிமேல் கிறுக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.