ஸ்மார்ட் போன்களை விற்கின்றீர்களா அப்படியென்றால் இதைப்படியுங்கள்.

restsmartphone01-14-1450090753

வந்து கொண்டே இருக்கும் புதிய மாடல்களும் புதிய தொழில்நுட்பங்களும் ஸ்மார்ட் போன்களை மாற்றிக்கொண்டே  இருக்க வைக்கின்றது.  ஒரு போன் வாங்கி மூன்று மாதம் ஆனால் அது சந்தையில் பழமையாகிவிடுகின்றது.  மேலும் அதற்கான  உதிரிபாகங்களும் நின்று விடுகின்றது.  இந்த நிலையில் புதிய மாடல்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க பழைய போன்களை விற்றுவிடுகின்றோம்.

ஸ்மார்ட் போன்கள் நமது சொந்த தகவல்கள் மற்றும் படங்கள், வீடியோக்களை வைத்திருக்கின்றன. இவற்றை முற்றிலுமாக நீக்கினாலும் ஏதாவது ஒரு வகையில்  சில தகவல்கள் போன்களில் அழிக்கப்படாமல் அப்படியே தங்கிவிடுகின்றது.

formatmemorycard-14-1450090751

இதனை தவிர்க்க நமது டேட்டாவை முழுமையாக Back Up செய்து எடுத்து விட வேண்டும்.  இந்த Back Up ஆனது முழுவதும் செயல்பட்டு Memory Card மற்றும் போனில் உள்ள தகவல்களை எடுத்து Back Up செய்துவிடுகின்றது.

மேலும் பேக்டரி Reset செய்துவிட்டு செல்போன்ளை விற்பது நல்லது.  இது முழுமையாக போனை மாற்றிவிடுகின்றது. இது போன் புதிதாக வாங்கும் போது எப்படி இருந்ததோ அந்த மாதிரி மாற்றி விடும்.

இப்போது ஒரு தகவலும் இருக்காது. பொதுவாக மெமரி கார்டை செல்போனுடன் யாருக்கும் தராதீர்கள்.  இவ்வாறு ஸ்மார்ட் போன்கள் விற்கும்போது போன் மெம்மரியும் பார்மட் செய்து பின் விற்றுவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.