அதிரடி விலை குறைப்பு ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள்

images

கடும் விமர்சனங்கள் மற்றும் கேலிகளையும் தாண்டியும் தனித்தன்மை வாய்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை வாங்குவது இளைஞர்களின் கனவு.  ஆனால் அதன் விலை அரை லட்சம் என்பதால் ஏக்கத்துடன் இன்டர்நெட்டில் அதன் Specification யையும் Promo Video வையும் பார்த்தே மனதை தேற்றிவருகின்றனர்.

இது ஆப்பிளுக்கு தெரிந்ததோ என்னவோ ஆப்பிள் நிறுவனம் தனது விலைமதிப்பை பாதியாக குறைத்துள்ளது.  இந்தியாவில் ஆப்பிளின் போன்களை நிலைநிறுத்துவது மற்றும் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெறுவது போன்ற பல நோக்கத்துடன் வாடிக்கையாளர்களுக்காக விலை குறைப்பு செய்து வருகின்றது.

சந்தையில் அறிமுகமான போது 42000 க்கு விற்ற ஆப்பிள் 5S  போன் இப்போது பாதியாக குறைந்துள்ளது. மற்ற நாடுகளில் ஆப்பிள் போனின் விலையிலேயே இந்தியாவில் தான் விலை குறைவு.  இப்போது ஆப்பிள் 6 வெளிவந்து 46,000 க்கு விற்றுக் கொண்டிருகக்கின்றது.  ஆப்பிளின் சிறப்பம்சங்களில் அதன் விலையும் ஒன்று.  அதன் விலை அதிகமாக உள்ளதால் தான் அதை வாங்குவது என்பது பெரிய மதிப்பு என கருதுகின்றனர். விலை குறைப்பு செய்தால் எல்லோரும் வாங்குவார்கள்.  பிறகு ஆன்டிராய்டுடன் ஆப்பிளை ஒப்பிடுவார்கள், பல தரப்பட்ட மக்கள் நிறைய குறைகளை நிறைகளை கூறுவர்.  இதனால் ஆன்டிராய்டை ஆப்பிளில் இன்ஸ்டால் செய்யும் காலமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.