அறிமுகம் செய்யப்படும் புதிய ஜியோனி செல்போன்கள்.

15-gionee11

ஸ்மார்ட் போன் என்ற கொள்கையை ஆரம்பித்தது ஆப்பிளாக இருக்கலாம் ஆனால் அதன் விலை அதிகமாக இருந்ததால் பலதரப்பினராலும் பயன்படுத்த முடியவில்லை.  ஆனால் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியவுடன் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு விலையுயர்ந்த செல்போன்களைப் போலவே ஆன்டிராய்டு செல்போன் அறிமுகப்படுத்தியது.

உண்மையை சொல்லப்போனால் ஆன்டிராய்டு செல்போன் இந்த அளிவிற்கு இந்தியாவில் பிரபலமாக சாம்சங் காரணகர்த்தா.  ஒரு ஸ்மார்ட் போன் ( ஐபோன் ) 35000 ரூபாய்க்கு விற்கும்போது சாம்சங் அதை வெறும் 12000 ஆயிரத்திற்கு விற்றது.  சோனி நிறுவனமும் தனது XPERIA என்ற ஸ்மார்ட் போனை சந்தையில் இறக்கியது.  எப்படியோ ஆன்டிராய்டு இயங்கு தளத்தினை பரப்பிட இந்த நிறுவனமும் போட்டி போட்டு விற்றுத் தீர்த்தன.

சாதரண நோக்கியா போனை கூட வாங்க முடியாத அடித்தட்டு மக்களையும் Multimedia  செல்போன்களை வாங்க வைத்த சீன நிறுவனங்கள்  மற்றும் கொரியன் நிறுவனங்களும் ஸ்மார்ட் போனை தயாரித்து வெளியிட ஸ்மார்ட் போன் தற்போது வெறும் 2500 ல் இருந்து கிடைக்கின்றது.

அந்த வகையில் மக்களின் தேவையை நன்கு புரிந்து கொண்ட GioNee என்ற நிறுவனம் தனது செல்போன் விற்பனையை 2015 ல் இந்தியாவில் ஆரம்பித்தது.  மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் ஏற்கனவே உள்ள செல்போன்களில் என்ன பிரச்னை அதை OverCome செய்து விடுவது என்று பல வகையில் ஆராய்ந்து பின் புதிய மாடல்களை வெளிவிடுகின்றது.

தற்போது வெளிவந்துள்ள Gionee E life என்ற ஸ்மார்ட் மொபைல் 6 inch HD LED, மற்றும் 21 MB Camera வை கொண்டது.  தற்போது சந்தையில் உள்ள மாடல்களில் இதன் விலை 35000 ரூபாய்.  3 GB RAM  மற்றும் 32 GB முதல் 128 GB வரை நீட்டிக்கும் வசதி.  64GB இன்டர்நல் மெம்மரி என்று இதன் சிறப்பம்சங்கள் அதிகம். 2.0 GHz Octa Core Processor மற்றும் 3250 நீடித்துளைக்கும் பேட்டரி.

புதிய தொழில்நுட்பங்களை இந்தியா எப்போதும் வளர்த்துவிடும்.  அதே சமயம் மக்களின் ஆதரவை பெறுவதும் கடினம்.  இதை இரண்டையும் Gionee பெற்றால் கண்டிப்பாக சாம்சங். சோனி வரிசையில் Gionee யும் சேர்ந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.