சிகரெட்டின் புகையில் மரணித்தவர்கள் அதிகம்

cigarae hd

புகைப் பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள் என வாஷிங்டனில் இயங்கும் உலக சுகாதார மையம் புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.  இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகள்.  குழந்தைகளுக்கு நிமோனியா. ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது.

1,65.000 குழந்தைகள் புகைப் பிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பதால் மரணம் அடைகின்றனர்.  இவர்களில் பெரும்பாலோர் தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

சொந்த வீடுகளில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு இதர நபர்கள் விடும் புகை பாதி்ப்பை ஏற்படுத்துகிறது.

சிகரெட் பிடிக்காதவர்கள் வீடுகளில் வசிக்கும் குழந்தைகளை விட சிகரெட் பிடிப்போர் வசிக்கும் குழந்தைகளின் நுரையீரல்கள் மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 40 சதவீத குழந்தைகளும், 33 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் மறைமுக புகையினால் மரணமடைந்துள்ளனர்.

செய்தி. தேஜஸ் மலையாள நாளிதழ்.

Leave a Reply

Your email address will not be published.