LED tv களை Smart tv களாக்க வந்துவிட்டது கங்காரு கம்ப்யூட்டர்

download1

கம்ப்யூட்டர் வரிசையில் பலவிதமான முன்னேற்றங்கள் வளர்ச்சிகள் மற்றும் மைல் கற்கள் உள்ளன.  புதிய கம்ப்யூட்டர்கள் மற்றும் கம்ப்யூட்டர் மாதிரிகள் வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் இன்ஃபோகஸ் நிறுவனத்தின்  கங்காரு கம்ப்யூட்டர் வெளிவந்துள்ளது.

இது ஒரு சிறிய CPU.  இதை எங்கு வேண்டுமானாலும் கனெக்ட் செய்து சாதரண ஸ்கீரினை ஸ்மார்ட் ஸ்கிரீனாக எளிதாக மாற்றிவிடலாம்.  இந்த CPU இன்டல் ஆடம் ( Intel Atom )  பிராஸஸர் உடன் வந்துள்ளது.  இது DC Power Supply மற்றும் Battery பவரில் இயங்கக் கூடியது.

images

ஒரு நாளில் குறைந்தது 4 மணிநேரம் பேட்டரியில் தொடர்ந்து இயங்கும் ஒரு பாக்கெட் சைஸ் மட்டுமே இதன் அளவு.  இதில் அதிகமாக போர்ட்கள் தேவைப்படும் போது ஒரு சிறய இணைப்பை அதனுடன் இணைத்து விடலாம் இந்த இணைப்பில் USB, HDMI Port கள் உள்ளது.

மேலும் இந்த கணினியில் WiFi மற்றும் Bluetooth ஆகியவைகள் காணப்படுகின்றது.  இந்த சிறிய கணினி மூலம் நம் வீட்டு சாதரண LED Tv க்களில் கூட HD Movies, Games, Internet Browsing ஆகியவற்றை தெளிவாக பார்க்க, விளையாட முடியும்.

download

2 GB RAM மற்றும் 32GB முதல் 128GB வரை ஹார்டு டிஸ்க் மெமரியை உடையது.

இதன் இயக்க அமைப்பு விண்டோஸ் 10 புதிய இயக்க அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளது.

இதன் விலை 14,000/- வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.