காற்று மண்டலத்தை சுத்தமாக்கும் துளசி செடி

thulsi2

துளசிச் செடியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததே.  சிலரது வீட்டில் துளசி செடி மாடம் வைத்து அதில்  துளசி செடி வைப்பர்.  தினமும் எழுந்து சுற்றி வந்து கடவுளை வணங்குவர்.  இது உண்மையா நல்லதா என்று தெரியாது.  ஆனால் துளசி செடியானது அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை சுவாதித்து ஆக்ஸிஜனாக வெளியேற்றுகின்றது.

இந்த ஆக்ஸிஜனை சுவாதித்தால் உடலுக்கு நன்மையே விளையும்.  சுவாசக் கோளாறுகள் நீங்கிவிடும்.  தினமும் 5 துளசி இலைகளை அதிகாலை வெறும் வயிற்றில் மென்றோமானால் நமக்கு ஏற்படும் வயிற்று வலி, மலச்சிக்கல், வாயுப்பிரிதல் போன்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.

துளசி வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களை நீக்கி சுத்தம் செய்கின்றது.  மலைவளம் வருவதற்கான முக்கிய காரணமே மலைகளில் உள்ள மூலிகை செடிகளின் வாசம் நாம் மலையை சுற்றி வரும் போது நமக்கு நல்லதை செய்கின்றது. சுத்தமான காற்று சுவாசிக்க சுவாசிக்க நோய்கள் அகன்று விடுகின்றன.  வீட்டுக்கு முன்னர் துளசி, திருநீற்றுப்பச்சிலை, கறிவேப்பிலை மற்றும் வேம்பு போன்ற மூலிகை செடிகள் இருந்தாலே போதும் அதன் மீது பட்டு வரும் காற்று நமக்கும் நன்மையை தரும்……

Leave a Reply

Your email address will not be published.