சிறுநீரக தொற்று

kidney

சிறுநீரகத் தொற்று என்பது ஒரு வகையான சிறுநீரக பாதை தொற்றுகளாகும்.  ஏனெனில் பாக்டீரியாக்கள் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் வடிகுழாய் மட்டுமின்றி சிறுநீர்ப்பையையும் தாக்கும்.ஆகவே சிறுநீரக பாதையில் தொற்றுகள் வந்தால், உடனே டாக்டரை அணுகி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.  இல்லாவிடின், அவற்றால் சிறுநீரகங்கள் பாதிப்பு அடைவதோடு. அழுகிய புண் காரணமாக இரத்தத்தில் நச்சுத் தன்மை உண்டாகக்கூடும்.

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!! பொதுவாக, சிறுநீரக தொற்றுக்களை குடலில் வாழும் ஈகோலை என்னும் உயிருக்கே உலை வைக்கும் பாக்டீரியா தான் ஏற்படுத்தும்.  இந்த பாக்டீரியா சீக்கிரம் சிறுநீரக பாதையில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.  அதுவும் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய பயன்படுத்தும் டிஸ்யூ பேப்பர் வழியாகவும் அல்லது உடலுறவு கொள்வதன் மூலமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

சிறுநீரக பாதை தொற்றுகளால் பெரும்பாலும் பெண்கள்தான் கஷ்டப்படுகிறார்கள்.  இதற்குக் காரணம் அவர்களின் சிறுநீர்ப்பையானது பிறப்பு உறுப்பிற்கு அருகாமையில் இருப்பதால் சீக்கிரம் பாக்டீரியாக்கள் தொற்றுக்களை ஏற்படுத்தும்.  இது ஆண்களுக்கு வருவதற்கு இல்லை என்று சொல்லமுடியாது.  இது ஆண், பெண் யாருக்கு வேண்டுமானாலும் வரும்.

..சிறுநீரக தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள்.

  1. நீரிழிவு நோயினால் கஷ்டப்படுபவர்கள்.
  2. பாக்டீரியா தொற்றுகள் புரோஸ்டேட் சுரப்பியில் இருந்தால் அதனால் அந்த பாக்டீரியா பரவி சிறுநீரக தொற்றுகள் ஏற்படலாம்.
  3. அடிக்கடி உடலுறவு கொள்ளும் பெண்கள்.
  4. கர்ப்பிணிகள்
  5. சிறுநீரக கற்கள் உள்ளோர்.மற்றும் மலச்சிக்கல் உள்ளோர்.
  6. 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமான காய்ச்சல்.
  7. குளிர்ச்சி அதிகமாக இருத்தல்.
  8. வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு.
  9. அதிகமான களைப்பு மற்றும் பசியின்மை.
  10. இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் வலி
  11. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
  12. மங்கலான சிறுநீர் அல்லது இரத்தம் கலந்த சிறுநீர்.

மேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியமானது.  டாக்டரை அணுகி உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். .இல்லாவிடில் சிறுநீரகம் மட்டுமின்றி, அழுகிய புண் காரணமாக இரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படக்கூடும்.  மற்றும் சிறுநீரகம்தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.  சிறுநீரகம்தான் இரத்தத்தில் கலந்துள்ள கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் உறுப்பு.  எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இல்லையெனில் மரணம் வருவதை தடுக்க முடியாது.

சிறுநீரக கல் பிரச்சினைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதுபோல் உணர்ந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியங்களை பின்பற்றி வரவேண்டும்.  அவ்வாறு செய்து வந்தால் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்.

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆண்டி பாக்டீரியல் தன்மையினால். சிறுநீரகப் பாதை தொற்றின் வேகத்தை தடுக்கலாம்.

காற்றாழை ஜுிஸ்

தினந்தோறும் காலையில் எழுந்ததும் காற்றாழை ஜுிஸ் குடித்து வந்தால் சிறுநீரக தொற்றுகள் மற்றும் சிறுநீரக பாதை தொற்றுகள் குணமாகும்.

பேக்கிங் சோlடா

சிறுநீரக பாதையில் அல்கலைனை உருவாக்குகிறது பேக்கிங்சோடா.  இதனால் தொற்றுக்களை எளிதில் அகற்றிவிடுகிறது.  அதற்கு தினந்தோறும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டம்ளர் தண்ணீரில் சேர்த்து, கலக்கி, குடித்து வர வேண்டும்.

பூண்டு.

இரண்டு அல்லது மூன்று பூண்டை தினந்தோறும் பச்சையாக சாப்பிட்டு வரவேண்டும்.  இப்படி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகம் உற்பத்தியாகிறது.  இதன்மூலம் பாக்டீரியாக்களை சிறுநீரின் வழியே வெளியேற்றி விடலாம்.

வைட்டமின் சி.

வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களான திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலம் பெறுகிறது.  இதன் மூலம் சிறுநீரகப் பாதையை தாக்கிய பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி வெளியேற்றி விடுகிறது.

சீமை சாமந்தி டீ

தினந்தோறும் இரண்டு கப் சீமை சாமந்தி டீயை குடித்து வந்தால் சிறுநீரகப்பாதையை மட்டுமின்றி உடலைத் தாக்கிய மற்ற பாக்டீரியாக்களையம் எளிதில் அகற்றி விடலாம்.

Leave a Reply

Your email address will not be published.