மழைக்காலங்களில் சாப்பிடும் உணவுகள்

images

உணவுகள் பருவநிலைக்கேற்ப சாப்பிட வேண்டும் வெயில் காலத்தில் உண்ணும் உணவுகள் மழைக் காலத்தில் உண்ணக்கூடாது.   மழைக்கால உணவுகளை வெயில் காலத்தில் உண்ணக் கூடாது.

1. மழைக்காலத்தில் வெப்பத்தை ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் நம்மை கத கதப்பாக வைத்துள்ள உணவுகளை அதிகமாக உண்ணலாம். மழைக்காலத்தில் பால், தயிர், மோர் போன்ற உணவுகளை நீக்குவது நல்லது வெண்ணை உணவுகளும் வேண்டாம்.

2. மழைக்காலத்தில் அதிக நீர்ச்சத்து உணவுகள் வேண்டாம்.  இது உடலில் நீர் பெருக்கி விடும்.  வியர்வை வெளியே வராததால் சிறுநீர் மற்றும் மலம் வழியாக நீரை வெளியேற்றும்.

3. நீர் நிறைந்த சுரைக்காய், வாழைத்தண்டு, பூசணிக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் போன்றவைகள் அதிகமாக உண்ணவேண்டாம்.

4. ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் தவிர்ப்பது நல்லது  சளிபிடிக்காமல் இருக்க மழை காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தவும்.

5. நிலவேம்பு கசாயம் வைத்து குடும்பத்தார்கள் சாப்பிடுவதால் மழைக்காலங்களில் தொற்றும் நோய்கள் குணமாகும். வேகவைத்த கிழங்குகள், பனங்கிழங்குகள் மற்றம் சோளக் கதிர்கள் ஆகியவற்றை உண்ணலாம்.

6. இட்லி, சாம்பார், சட்னி, போன்றவைகளை சூடாக உண்ணலாம்.  காரச் சட்னிகளை சாப்பிடும் தருணம் இது.

Leave a Reply

Your email address will not be published.