பாஸ்ட் புட்கள் உடலுக்கு நன்மை தருபவைகளா?

download

இப்போது நகர மக்கள் மட்டுமின்றி கிராம மக்களும் சாலைகளில் கிடைக்கும் துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர்.  இதன் காரணம் அதன் மணம், ருசி மற்றும் உடனே கிடைப்பதால் தான் என்கின்றனர்.

ஆனால் மக்களுக்கு இது பாதுகாப்பானதா உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியவைகளா என்று ஆராய்ந்து பார்த்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

1. ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் சிக்கன் பீஸ்கள் மற்றும் சிக்கன் லாலிபாப் போன்றவைகள் உடனே வெட்டி சமைப்பதில்லை குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு முன்னர் (?) தான் வெட்டி வைத்திருப்பார்கள்.  பொதுவாக மாமிசத்தை 3 மணிநேரம் வெட்டி வைத்தாலே வாடை அடிக்கத் துவங்கிவிடும். ஆனால் வினிகரில் கழுவி பயன்படுத்துவதால் வாடை ஒன்றும் அடிக்காது.  ஆனால் வயிற்றுக்குள் சென்று வயிற்றை அலசிவிட்டுவிடும்.

2. இதைவிட ரெட்சிக்கன் வேண்டும் என்பதற்காக சிவப்பு சாயம் ( ரெட் பவுடர் ) போட்டு கறியை கலராக்கி விடுவார்கள்.  இது உடலுக்குள் வேதி வினையை உருவாக்குவதாகும்.

3. சூரிய காந்தி எண்ணையில் படைத்த உணவுகள் கொழுப்பு அதிகமாக இருக்காது ஆனால் அதுவே திரும்ப திரும்ப  ஒரே எண்ணையை பயன்படுத்தினால் நல்லதல்ல.  சில கடைகளில் அதுவும் கிடையாது சாதரண பாமாயிலே பயன்படுத்துகின்றனர்.

4. நூடுல்ஸ் , பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் மிளகாய் சாஸ் மிக கொடுரமானது இது வயிற்றுக்கு சென்று கல்லீரலை பாதிக்கும்.  இந்த நூடுல்ஸ் வறுத்தெடுக்க பயன்படும் வாணலியை பார்த்திருக்கின்றீர்களா.  தீஞ்சிப்போய் தான் இருக்கும்.  தீய்ந்த செதில்கள் வயிற்றுக்குள் என்றால் புற்றுநோய்களை உருவாக்கும்.

5. மேலும் துரித உணவுகள் மட்டுமல்ல பீட்சா, பேன் கேக், எக் பிரட், பிரட் ஆம்லட் என்று பலவிதமான உணவுகள் உள்ளது.  இந்த உணவுகள் அனைத்தும் நன்மையை விளைவிப்பவை அல்ல.  அஜினமோட்டா சேர்க்கப்படும் உணவுகள் வேண்டாம்.

இந்த வகை உணவுகள் என்னதான் ருசியாக இருந்தாலும் அதை சாப்பிடுவது நல்லது கிடையாது.  பழங்கள், பழச்சாறுகள், மக்காச்சோளம், கடலை மற்றும் பனங்கிழங்குகள் தவிர அனைத்தும் நம் உடலுக்கு கேடு விளைவிப்பவைகள் தான்.

Leave a Reply

Your email address will not be published.