பிரவுஸிங் சென்டர் வைத்துள்ளீர்களா அப்போ டீப் பிரீஜ் ( Deep Freeze) இன்ஸ்டால் செய்துவிட்டீர்களா

download

Browsing Center வைத்துள்ளவர்கள் குறைந்தது 5 கணினிகளுக்கு மேல் தான் வைத்திருப்பார்கள்.  இந்த கணினிகளில் பாதுகாப்புக்கு தனித்தனியே ஆன்டி- வைரஸ் வைத்திருப்பது என்பது முடியாத காரியம்.  இலவசமாக வழங்கப்படும் ஆன்டி வைரஸ்களும் சரியாக இயங்குவது கிடையாது.

மேலும் இந்த கணினிகளில் தகவல் திருட்டும் அதிகமாகியிருக்கும் ஒருவர் பயன்படுத்தியப்பின் அடுத்தவர் பயன்படுத்தும் போது முன்னவரின் தகவல்களை காண நேரிடும்.  முக்கியமான தகவல்கள் வெளிப்படுகின்றன.

இந்த மாதிரி பிரச்சினைகளை தவிர்க்க கரடி மென்பொருள்.  ( Deep Freeze ) என்ற சாப்ட்வேர் பயன்படுகின்றது.  இதை இன்ஸ்டால் செய்து விட்டால் கணினியில் உள்ள டிஸ்குகளை லாக் செய்து விடும்.  DFS_2Status

இந்த சாப்ட்வேர் என்ன செய்யும் என்று கேட்கின்றீர்களா…. இது போல் சாப்ட்வேர் வைரஸை ஒழிக்க ஏதுமில்லை.  வைரஸை மட்டுமில்லை ஒரு சின்ன தகவலை கூட இந்த சாப்ட்வேர் புதிதாக அனுமதிக்காது…

Deep-Freeze

முதலில் தேவையான அனைத்து சாப்ட்வேர்கள் மற்றும் வேண்டிய வால் பேப்பர் மற்றும் செட்டிங்குகள் என்று அனைத்தையும் செய்து விடவேண்டும்.  கணினியை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

பின் கணினியில் Deep Freeze என்ற சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து விடவும்.  இன்ஸ்டால் செய்யும் போது Password மற்றும் எந்த டிஸ்க்கினை லாக் செய்ய வேண்டும் என்று கேட்கும். இப்போது இன்ஸ்டால் செய்துவிட்டு விடவும்.

இப்போது கணினியை RESTART  செய்துவிட்டோமானால் Deep Freeze வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இனிமேல் எந்த வைரஸூம் மற்றும் பைல்களும் கணினியில் ஏற்றினால் கணினியை ஆப் செய்து ஆன் செய்யும் போது அனைத்தும் அழிந்துவிடும். சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் இருந்த மாதிரியே இருக்கும்.

குறிப்பு

மீண்டும் கணினியில் வேறு சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் செய்யத் தேவைப்பட்டால் Deep Freeze ன் கரடி Icon டேஸ்க்பாரில் காணப்படும். அதை கிளிக் செய்து Unlock செய்து விடலாம் அதற்கு பாஸ்வேர்டு கேட்கும்.

மீண்டும் லாக் செய்து விடவும்….

Deep Freeze னை டவுன்லோடு செய்து விட  இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.