தூங்கும்போது உள்ளாடைகனை அணிந்து தூங்குவது சரியா?

inner wear

 தூங்க செல்வதற்குமுன் குளித்து விடுங்கள்.  களைப்பு நீங்கி உடல் சௌகர்யமாக இருக்கும்.  சில பெண்கள் தூங்குவதற்கு முன் குளித்து விட்டு, மேக்அப் செய்து கொண்டும் தூங்குகிறார்கள்.  ஆனால், இப்பொழுது அதுவல்ல பிரச்சினை.  இரவு தூங்கும் பொழுது பிரா/உள்ளாடை அணிந்து தூங்கலாமா? வேண்டாமா?

பிறந்த மேனியாக தூங்குவதினால் என்னென்ன நன்மைகளெல்லாம் இருக்குது என்று உங்களுக்குத் தெரியுமா?

இது சிலருக்கு சௌகரியம் இல்லாமல் இருக்கும்.  ஆனால் சில பெண்கள் பிரா அணியாமல் தூங்கினால், மார்பகங்களின் வடிவம் மாறிவிடுமோ என்று பயப்படுவதும் உண்டு.  பெண்கள் பலர் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு முடிவு தான் என்ன……?  பொருத்தமற்ற உள்ளாடை அணிவதன் மூலம் சந்திக்கும் பிரச்சினைகள்1  தூங்கும்போது பிரா அணிந்து தூங்குவது சரியா? தவறா?

இறுக்கமாக அணிவதை தவிர்க்க வேண்டும்

சில பெண்கள் இறுக்கமாக பாடி அணிந்தால் அவர்களது தோற்றம் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.  இது முற்றிலும் சரியல்ல,  இதனால் சுவாசிப்பதற்கு பிரச்சினையாகத்தான் இருக்கும்.  அதிலும் தூங்கும் பொழுது இறுக்கமாக பாடி/பிரா அணிந்தால் நிச்சயம் சுவாசிப்பதில் சிரமங்கள்தான் ஏற்படும்.

சௌகரியமாக அணியுங்கள்

இரவு உறங்க செல்லும் போது, உங்கள் கையை மேலே உயர்த்தி பாருங்கள்.  பிரா இறுக்கமாக, பிடித்தார் போல் இல்லாது சௌகரியமாக இருக்குமாறு அதை லூசாக்கச் (Loose) செய்து அணியுங்கள் என்று சொல்கிறார்கள்.

காட்டன் துணியைப் பயன்படுத்துங்கள்

ஃபேஷன் என்ற பெயரில் அதிகமான ஸ்டைல்களில் பிரா வடிவமைக்கப்படுகிறது.  இது நிறைய இரகங்களில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் காட்டன் துணியில் உற்பத்தி செய்த பிரா அணிவதுதான் சிறந்தது.  இது உஷ்ணம் மற்றும் குளிர் என வெயில் காலங்கள் மற்றும் குளிர்காலங்களிலும், மார்பகங்கள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

இரத்த ஓட்டத்ததை பாதிக்கும்.

பிரா இறுக்கமாக அணிந்து து’ங்கும் பொழுது, அது சீரான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். அதனால் தூக்கம் வராமல் கூட இருக்கலாம்.  அல்லது அசௌகரியமான உணர்வுகள் ஏற்படலாம்.  ஆகவே மிகவும் இறுக்கமான பிரா அணிந்து தூங்க வேண்டாம்.

தவறான சைஸ்.

பல பெண்கள் தங்களுக்கு மிகவும் பொருந்தாத தவறான சைஸில்தான் பிராக்கள் அணிகின்றனர்.  இதனால் அவர்களுக்கு, சீரான இரத்த ஓட்டமின்மை, தோல் பிரச்சனை, சுவாசக் கோளாறுகள், அதிக நேரம் நடக்க முடியாமல் போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

நல்ல உறக்கத்திற்கு தீர்வு.

பெண்களுக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் பிரா அணிவதில் அதிக முக்கியத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  டைட்டாக அணிவதுமட்டுமல்ல.  மிகவும் லூசாக பிரா அணிவதும் தவறு.  இதுவும் அசாதரணமான உணர்வினை தரவல்லது.

Leave a Reply

Your email address will not be published.