கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்றால் என்ன?

images

கம்ப்யூட்டர் என்பது இன்றைய உலகத்தில் ரொம்ப முக்கியமானது.  சிலருக்கு கணினியில் 24 மணி நேரமும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.  இந்த கம்ப்யூட்டர் வேலையில் பாதிக்கப்படுவது கண்கள்  தான்.

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்பது என்ன வென்றால் வெகுநேரம் கணினியை உற்று நோக்கி வேலை செய்து வந்தால் கண்களில் உள்ள நீர் வற்றிவிடும். கண்களில் உள்ள விழித்திரையில் எரிச்சல் ஏற்பட்டு பார்வையில் குறைபாடு வருகின்றது.

இதை தவிர்க்க கீழ்கண்ட வழிகளை பின்பற்றவும்.

1. கம்ப்யூட்டர் முன் வெகுநேரம் கண்விழித்து வேலை செய்யக் கூடாது.  இடைவெளி விட்டு விட்டு தான் வேலையை செய்து வர வேண்டும்.

2. இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை இயற்கை செடிகள் மற்றும் மீன் தொட்டியில் உள்ள மீன்கள் என்று பார்வை மாற்றி மாற்றி செயல்படவும் பார்க்கவும்.

3. கால்கள் தரையில் படுமாறு உட்கார்ந்து கணினியில் வேலை செய்யவும்.

4. தலை குனிந்த நிலையில் வேலை செய்யக் கூடாது.  இதனால் கழுத்து வலி மற்றும் முதுகு வலிகள் ஏற்படும். நேராக நிமிர்ந்த நிலையில் மட்டுமே வேலை செய்து வர வேண்டும்.

5. திரையில் வெளிச்சத்தை குறைத்து வைக்கவும். மேலும் இருட்டறையில் கணினி முன் அமர்ந்து வேலை செய்யக் கூடாது.  பிரகாசமான அரையில் கணினியின் திரை வெளிச்சம் சிதறடிக்கப்படுகின்றது இதனால் கண்பார்வைக்கு பாதிப்பு வராது.

6. கண்கண்ணாடியை வாங்கும் போது UV Coating கொடுத்துள்ளதை அணிந்து கொள்ளலாம்.  இதன் மூலம் கணினியின்  திரையில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் நம் கண்களை பாதிக்காது.

Leave a Reply

Your email address will not be published.