கண்பார்வை தர புதிய செயற்கையான கண்கள் வந்துவிட்டது

images

ஒரு மனிதனுக்கு கண் பார்வை என்பது மிக முக்கியமானது ஐம்பொறிகளில் கண்ணும் ஒன்று இந்த கண் வாழ்நாளில் பல பாதிப்புகளில் வீணாகி விடுகின்றது.  அல்லது விபத்துகளில் கண் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோய் விடுகின்றது.

கண் பார்வையை மீட்டுத் தர அடுத்தவர்களின் கண்கள் ( இறந்து போனவர்களின் கண்கள் ) எடுத்து பார்வையற்றவர்களுக்கு வைத்து விடுகின்றனர்.  இந்த வகையில் கண் பார்வை அற்றவர்கள் கூட பார்வையை பெற்று விடுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள கார்னெல் யுனிவெர்சிட்டியில் உள்ள நரம்பியல் விஞ்ஞானியான ஷீலா நீரென்பெர்க் என்றவர் கண் பார்வை குறைபாட்டைப் போக்க செயற்கையாக கண்களை வடிவமைத்துள்ளார்.

இந்த செயற்கை கண்கள் மூலம் பிரகாசமான ஒளி மற்றும் ஒரு குழந்தையின் முகம் தெளிவாக உணரப்பட செய்து காட்டியுள்ளார்.  இதில் முக்கியமான விசயமே காணும் காட்சிகளை எலக்ட்ரானிக் சிக்னலில் இருந்து மூளை புரிந்து கொள்ளும் சிக்னல்களாக மாற்றுவதுதான்.

இந்த சோதனை வெற்றிபெற்றால் மனித மூளையுடன் உள்ள அனைத்து சிக்னல்களையும் புரிந்து கொள்ளலாம் அதைப் புரிந்து கொண்டு காது கேளாமை, ஊமையை கூட சரிசெய்து விடலாம் என்று ஆய்வறிக்கையை வெளிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.