விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு காப்பீடு அளிக்கும் SBI Genaral Insurance

Personal_Accident_Insurance

இப்போதெல்லாம் விபத்தின் மூலம் இறப்பது சகஜமாகிவிட்டது.  மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் அது விபத்தினாலும் நடக்கின்றது.  நாம் இறந்த பிறகும் நம் குடும்பத்தை பாதுகாக்க பணம் தேவைப்படுகின்றது.  குடும்ப நலத்தை அக்கறையில் கொண்டு நம்மை நாமே காப்பீடு செய்வது முக்கியமானது தான்.  நாம் நமக்கு பின்னர் நம் குடும்பத்தை பாதுகாக்க ஒரு அங்கத்திடம் வருடா வருடம் தொகை செலுத்தி காப்பீடு செய்வது தவறானது கிடையாது.   இதனால் வருடத்திற்கு ஒரு சிறு தொகையை பாதுகாப்புக்காக செலவிடுவதில் தவறு கிடையாது.

இப்போது பாரத ஸ்டேட் பாங்கில் புதிதாக A/C உருவாக்கும் போது அங்கு இப்போதெல்லாம் கட்டாய மாக இன்சூரன்ஸ் ஆக்கப்பட்டிருக்கின்றது.GPA SBI MSI Leaflet 3.5×8.5 images

குறைந்தது வருடா வருடம் 100 முதல் 1000 ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டும்.  இந்த தொகை ஒரு முறை செலுத்திவிட்டால் அந்த வருடம் முழுக்க நீங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளீர்கள்.  எதிர்பாராத விதமாக உங்களுக்கு விபத்தில் மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கீழ்கண்ட தொகை இழப்பீடாக வழங்கப்படும்.

பிரீமியம் தொகை                காப்பீடு தொகை

 ரூபாய் 100                                     2,00,000

ரூபாய் 200                                     4,00,000

ரூபாய் 500                                    10,00,000

ரூபாய் 1000                                  20,00,000

இந்த காப்பீடு தொகை மிக முக்கியமானது என்று கருதுபவர்கள் தொடர்ந்து வருடந்தோறும் பிரீமியம் கட்டி தொடரலாம்.  தொடர விருப்பமில்லாதவர்கள் விட்டு விடலாம்.  வருடா வருடம் A/C  ல் இருந்த நமது அனுமதியின் பெயரில் பீரிமியம் பணம் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த காப்பீடு தொகை விபத்தல் மரணம் அடைந்தால் மட்டுமே தரப்படும். மற்ற இயற்கை மரணங்களுக்கோ அல்லது நோயினால் இறப்பதற்கோ கிடையாது.

மேலும் இதை Claim செய்திட

1. FIR Copy

2. Death Certificate

3. Intimate a Claim

மேலும் விபத்தினால் மரணம் ஏற்பட்ட பின் உடனே தகவலை தெரிவிக்க வேண்டும்.  அதற்கான வழிமுறைகளை SBI General Insurance  இணையதளத்தில் உள்ளன.  அல்லது அருகில் உள்ள SBI பாங்கினை அனுகவும்.

அப்படி பாலிஸி எடுத்துவிட்டால் உடனே அதை குடும்பத்திடம் வெளிப்படையாக தெரிவித்து டைரியில் குறித்து வைத்து விடவும்.  ஒவ்வொரு முறை பிரீமியம் கட்டும் போதும் அதை உங்கள் குடும்பத்திற்கு ஞாபகப்படுத்துங்கள்.

மேலும் தகவலுக்கு PDF யை டவுன்லோடு செய்து படித்திடவும்.

இந்த இணையப்பக்கத்திற்கு செல்லவும்.

Leave a Reply

Your email address will not be published.