மைக்ரோசாப்ட் ஆபிஸ் க்கு நிகரான இலவச ஆபிஸ் சாப்ட்வேர்கள்

images

கணினி மக்கள் உபயோகத்திற்கு என வந்துவிட்டப்பிறகு முதலில் எழுத்து வேலைகள் அனைத்தையும் கணினி மூலம் செய்வது என்று வருகையில் அதற்கென் எழுதப்பட்ட நிரல் தான் மைக்ரோசாப்ட் ஆபிஸ்.  இது Word, Excel, Power Point என்று தனித்தனி Utilities களை உள்ளடக்கியது.

கணினி வாங்கியவுடன் முதலில் எந்த சாப்ட்வேர் இருக்கின்றதோ இல்லையோ ஆபிஸ் இருக்க வேண்டும்.  ஆனால் ஆபிஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் வருவது கிடையாது.  இதை தனியாக வாங்கி தான் போட வேண்டும்.  ஆனால் அதன் செலவு அதிகமாக உள்ளது.  திருட்டுக் காப்பியை அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது.  பயன்படுத்தினால் Income Tax ரெய்டு அல்லது iT ரெயிடின் போது மாட்டிக்கொள்வோம் குறைந்த பட்சம் 10 கம்ப்யூட்டர் களுக்கு ஒரு ஒரிஜினல் பேக் வைத்திருத்தல் வேண்டும்.

ஆனால் இது வேண்டாம் என்னால் செலவு செய்ய முடியாது நான் ஒரு மிகப்பெரிய கணினி நிறவனத்தை வைத்துள்ளளேன் என்றால் கவலை வேண்டாம் உங்களுக்காக மைக்ரோசாப்ட் ஆபிஸை விட தொழில்நுட்பம் வாய்ந்த ஆபிஸ் தொகுப்புகள் இலவசமாக கிடைக்கின்றது.

1. ஓப்பன் ஆபிஸ் ( Open Office ) :

images

இந்த ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பு Word, Excel Spread Sheet, மற்றும் Slide Show Creator என்று மைக்ரோசாப்ட்டுக்கு இணையாக நிறைய அப்ளிகேசன்களை உள்ளடக்கியது.  கிட்டத்தட்ட மைக்ரோசாப்ட்டினை போன்று  உபயோகப்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.  இதை இலவசமாக டவுன்லோடு செய்திட இந்த முகவரிக்கு செல்லவும்.

http://www.openoffice.org/download/

 

2. லோட்டஸ் ஆபிஸ் ( Lotus Office ) :

LOTUSSYMPHONY2

ஐபிஎம் என்ற கணினி நிறுவனம் நாம் எல்லோரும் அறிந்ததே இந்த லோட்டஸ் ஆபிஸ் இலவசமாக வழங்குகின்றது.  இதில் டாக்குமென்ட்ஸ், ஸ்பிரட் ஷீட், பிரசென்டேசன் ஆகியவைகள் உள்ளது. இதுவும் மைக்ரோசாப்ட் போன்றது.  இதை டவுன்லோடு செய்திட

 

http://ccm.net/download/download-20148-ibm-lotus-symphony

மேற்கண்டவைகள் மைக்ரோ சாப்ட்டுக்கு இணையான பயன்களை தரும். ஆனால் சில அப்ளிகேசன்கள் ஆன்லைனில் பயன்களைத்தரும் வடிவில் உள்ளது zoho மற்றும் Google Docs ஆகியவைகள் அந்த வகையினைச் சார்ந்தது.   இவைகளை பயன்படுத்த எவ்விதக் கட்டணமும் தர தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published.