எச்சரிக்கை! பூனை வீட்டில் வளருகின்றதா

cat-1024x576

பூனை வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளில் மிகவும் அழகானதும் எந்நேரமும் கொஞ்சிக்கொண்டே இருக்க தோன்றும். அதுவும் வளர்ப்பவர்களிடம் பாசமாகவும் எந்நேரமும் காலை சுற்றிக்கொண்டே சுறு சுறுப்புடன் இருக்கும்.  ஆனால் இந்த பூனையின் உடலில் தான் மோசமான தொற்றுக் கிருமி வளருகின்றது.

பொதுவாக பூனை பெரிதானவுடன் என்ன தான் பால்சாதம், தயிர் சாதம் கொடுத்தாலும் ஒரு எலியை பிடித்து அடித்து தின்னால் தான் அதற்கு நிம்மதி.  இதனால் காடு மேடு சாக்கடை என்று எலி இருக்கும் இடத்தை தேடி அலைந்து கொண்டே இருக்கும்.  அப்போது அதன் உடம்பில் ஒட்டுண்ணிகள் தொற்றிக்கொள்ளும்.  பூனையின் முடி உதிர்ந்து கொண்டே இருக்கும் நாம் தூக்கி கொஞ்சும் போது அந்த முடிகள் கொட்டும்.  அப்போது நமது சுவாசத்தின் வழியாக தொற்றுக் கிருமிகள் உள்ளே சென்று சில பேருக்கு ஒவ்வாமை உண்டு பண்ணிவிடும்.

இவர்கள் தொடர்ந்து தும்மிக் கொண்டே இருப்பார்கள்.  இருமல் வரை கொண்டு செல்லும்.  பூனை சுருண்டு படுத்தே இருந்தாலோ அல்லது சாப்பிடாமல் இளைத்துப் போய் இருந்தாலோ அதற்கு காய்ச்சல் அடிக்கின்றது என்று அர்த்தம்.  பூனையை பற்றி கவலை வேண்டாம் அதற்கு ஒரு நாளில் சரியாகிவிடும்.  ஆனால் மனிதர்கள் அப்போது அந்த பூனையை கொஞ்சும் போது தொற்றுக் கிருமிகள் சுவாசம் வழியாக உள்ளே வந்து விடும்.

அப்போது மனிதனுக்கு இருமல், தும்மல், கட்டிச் சளி தோன்றும்.  காய்ச்சல் வரும்.  உடனே மருத்துவரை அணுகி காட்ட சரியாகிவிடும்.  ஆரம்பத்திலேயே எதையும் செய்ய வேண்டும். பூனையை வாரத்திற்கு ஒரு நாள் கிருமி நாசினி போட்டு குளிப்பாட்ட வேண்டும்.  குழந்தையை பூனை அருகில் வைக்கவேண்டாம்.  குழந்தைக்கு சுவாசப்பிரச்சினைகள் எளிதில் தோன்றும்.

Leave a Reply

Your email address will not be published.