இன்டல் ஸ்டிக் கம்ப்யூட்டர் வந்தாச்சு இனிமேல் அனைத்து டிவிக்களும் ஸ்மார்ட் டிவி தான்

download

எண்பதுகளில் ஒரு தெருவில் யாராவது ஒரு வீட்டில்தான் டிவி இருக்கும் அதுவும் கருப்பு வெள்ளைதான் ஒரே ஒரு சானல் மட்டும் தான் வரும் அதுவும் இந்தி மற்றும் அனைத்து மொழிகளிலும் வரும் தமிழில் என்றாவது ஒரு நாள் வரும்.

தொன்னூறுகளில் ஒரளவு எல்லாருடைய வீடுகளிலும் டிவி வந்துவிட்டது பின் 2000 மற்றும் 2010 க்குள் இருபது வருடங்களில் தொலைக்காட்சிகள் பல மாற்றமடைந்து விட்டது Color TV, LED, LCD ஆகிய  தொலைக்காட்சிகள் மினி திரையரங்கத்தையே வீட்டுக்கு கொண்டு வந்து விட்டது.

மேலும் கணினியின் கம்ப்யூட்டிங்கில் பாதியை செய்யும் பெரிய திரை LED மானிட்டர்கள் Smart TV என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் டிவிக்கள் என்னதான் HD முறையில் பெரிய படங்களை கொடுத்தாலும் இணையதளத்தினை செயல்படுத்தும் போது அதன் இயங்கு தளம் தடுமாறிவிடுகின்றது.

அதனால் Smart TV களை ஒரு முழுமையான கணினியாக மாற்ற முடியாவிட்டாலும் கணினியில் செயல்படும் Online videos மற்றும் Website, Multimedia  வேலைகளை செயல் புரிய ஒரு Device னை  Intel நிறுவனம் வடிவமைத்துள்ளது.  அதன் பெயர் Intel Stick Computer.  இது ஒரு சிறிய கணினி போன்றது இதனுள் சிபியு இருக்கின்றது மவுஸ் மற்றும் கீபோர்டு மற்றும் Flash டிரைவ்கள் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம். வைபை மற்றும் புளூடூத் போன்றவைகளை கொண்டு இதில் டேட்டா ஆக்ஸஸ் செய்து கொள்ளலாம்.

HDMI என்ற பின் அனைத்து LED டிவிக்களிலும் வந்துவிட்டது அதில் இந்த டிவைஸ் யை பின் செய்து விட்டால் போதும் ஸ்மார்ட் டிவி  தயாராகிவிடும்.

விலைதான் கொஞ்சம் அதிகம் அந்த விலையில் ஒரு டேபிளட்டையே வாங்கி விடலாம் ஆனால் Intel கம்பெனியின் வெளியீடு என்பதால் மவுசு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.