ஸ்கிரீன் சேவர் ( Screen Saver ) கணினிக்கு தேவையா?

3d-flower-box-2

கண்டிப்பாக நாம் சிறு வயதில் கோடைகால வகுப்பில் கணினி கற்றுக்கொண்டிருக்கும் போது முதல் வகுப்பிலே சொல்லிக்கொடுத்திருப்பார்களே கணினி உபயோகப்படாத வேளையில் கண்டிப்பாக Screen Saver வேண்டும் அது இல்லையென்றால் அவ்ளோதான் கம்ப்யூட்டர் மானிட்டர் கெட்டுவிடும்.  அதனால் கண்டிப்பாக கம்ப்யூட்டர் Stand By ல் இருக்கும் போது Screen Saver தேவை.  என்று பாடம் படித்து இருப்பீர்கள் என்றால் நீங்கள் ரொம்ப பழசு என்று கூறிவிடுவார்கள்.

இது பழைய உண்மையான செய்தி ஆனால் புதிய உண்மைச் செய்தியின் படி Screen Saver என்பது தேவையில்லாத ஒன்று தான்.  ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னர் எல்லாரும் CRT மானிட்டர்கள் பயன்படுத்தினார்கள். அதில் உள்ள வோக் காயிலில் இருந்து கதிர்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும். அந்த டியூபில் உள்ள பாஸ்பரஸ் திரை எந்த ஒளியும் இல்லாமல் இருந்தால் கதிர்கள் மூலம் பாதிக்கும். இதனால் தான் Screen Saver என்று ஒரு படத்தை கணினி செயல்படாத நேரம் செயல்பட்டுகொண்டிருக்கும்.

இப்போதைய  LED, LCD மானிட்டர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை.  இப்போதையே Screen Saver கள் தேவையற்றது கணினியின் மின்சாரத்தை செலவழிக்கின்றது. இனிமேல் கணினியை விட்டு சிறிது நேரம் தள்ளியிருக்க நேரிட்டால் கண்டிப்பாக SHUT DOWN அல்லது HIBERNATE செய்து விட்டு செல்லவும்.  HIBERNATE என்பது இப்போது எவ்வாறு கணினியில் அனைத்து Program களையும் Open செய்து வேலை செய்து கொண்டிருக்கின்றோமோ அப்படியே ஆஃப் செய்து விட்டு அடுத்த முறை ஆன் செய்து பயன்படுத்துவது.

இந்த ஆப்சனை Select செய்ய

சில லேப்டாப்பில் Screen யை ஆஃப் செய்து விடும் வசதியுள்ளது.  டெஸ்கிடாப்பில் மானிட்டரை ஆஃப் செய்து விட்டு செல்லலாம்.  இதன் மூலம் மின்சாரம் செலவு குறைவதோடு மானிட்டரின் செயல்பாடும் (வாழ்நாள்) அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published.