இன்டர்நெட் டேட்டாவை மிச்சபடுத்த OPERA BROWSER -ஐ பயன்படுத்துங்கள்

opera_mini

இன்டர் நெட் பிரவுஸர் என்று எடுத்துக்கொண்டால் நமக்கு தெரிந்ததெல்லாம் கூகுள்குரோம் ஒன்றுதான் Internet Explorer மற்றும் FireFox எல்லாம் என்ன வென்றே தெரியாது.  சரி விடுங்கள் அந்த Old Browser கள் எல்லாம் நமக்கெதுக்கு.?… Chrome Browser னை பயன்படுத்த காரணம் அதன் வேகம் மற்றும் புதிய வெப்சைட்டும் கிளர்ச்சியூட்டும் வகையில் தயாரான பக்கங்களையும் சப்போர்ட் செய்வதால்தான்.  மேலும் நிறைய Plugins  களை கூகுள் தயக்கமின்றி Support செய்யும்.

இவ்வளவுக்கும் மேல் அதன் வேகம் படுபயங்கரம் மற்றும் எளிய பயன்பாடு என்ற அதை பயன்படுத்தியவர்கள் கூறிக்கொண்டே செல்வார்கள்.  ஆனால் அவர்கள் அனைவரும் அன் லிமிடெட் டேட்டா கனெக்சனை வைத்திருப்பவர்கள். சாதரணமாக லிமிடெட் கனெக்சன் அல்லது பிரீப்பெய்டு டேட்டா கார்டு மூலம் இன்டர் நெட் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது இது.

குரோம் பிரவுஸர் நல்ல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது என்றானாலும் அதன் லோடிங் மெம்மரி அதிகம் குறிப்பாக ஒரு வெப் பக்கத்தினை லோடு செய்ய குறைந்தது இரண்டு எம்பி களை காலி செய்து விடும்.  நாம் பார்க்கும் வெப்பேஜ்களில் பிக்சர் இருந்தால் அதை அப்படியே டிஸ்பிலே செய்து விடும்.  100 KB ஒரு பிக்சர் என்றால் 10 பிக்சர் 1000 KB (1MB) தீர்ந்துவிடும்.  நாமே 200 mb அல்லது 500 Mb தான் போட்டிருப்போம் ஒரு சில தடவைகளில் 10 mb காலியானால் இன்னும் டவுன்லோடுக்கு என்ன செய்ய.?

மேலும் Facebook, Email போன்ற இணையதள வசதிகளை Chrome ல் பயன்படுத்துவதை விட அதற்கென்று உள்ள APPS ல் பயன்படுத்தினால் நல்லது.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க OPERA பிரவுஸர் சிறந்தது அதில் Optimizing Technology உள்ளதால் நமது வெப்சைட் Pages அனைத்தும் அளவு குறைக்கப்பட்டு மேலும் படங்களின் தரம் குறைக்கப்பட்டு அளவும் குறைக்கப்பட்டு காட்டப்படுகின்றது.

browser-page-load-time-100607459-large

கருத்துக் கணிப்பில் லோடிங் டைம் குறைவாக எடுத்துக் கொண்ட Opera Browser (மேலிருந்து இரண்டாவதாக)

இதனுடன் இணைந்த Download Manager மிகச் சிறந்த முறையில் டவுன்லோடு செய்து தருகின்றது. இந்த ஆண்டு ஆய்வறிக்கையின் படி Opera ஆனது மற்ற பிரவுசர்களை விட மிகவும் வேகமாக பக்கத்தை லோடு செய்து விடுகின்றது

Opera Browser Download Here

மேலும் செல்போன்கள் மற்றும் டேபிளட்களில் Opera mini யைப் பயன்படுத்துவதால் டேட்டா மிச்சப்படுகின்றதோடு விரைவாகவும் செயல்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.