சென்னையில் கனமழை, பெருவெள்ளம், பலிகள் காரணம்

ddddxe

சென்னையில் பெய்து வரும் கனமழையில் பாதிப்புகள், உயிரிழப்புகள் மிக அதிகம் என்றாலும் இந்த பலிகளில் பாவங்கள் மழையைப் போய்ச் சேராது.  அது எப்போதும் போல் பெய்து கொண்டுதான் இருக்கின்றது 100 வருடத்திற்கு முன்பு கூட இதே மழை (1904) ஆம் ஆண்டு பெய்துள்ளது.  கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபதிகள் பன்மாடிக்குடியிருப்புகளை கட்டியவர்களைத்தான் சேரும்.maxresdefault (1)

எங்கு வெள்ளம் வரும் எங்கு வெள்ளம் வராது என்று சரியாக கணித்துதான் வீடுகளை கட்டுவர். பள்ளமான இடங்களை ஏரியாகவும் குளமாகவும் பறித்து விடுவார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் வடிகாலை அமைத்து விடுவார்கள் ஆனால் பெருகி வந்த மக்கள் தொகை சென்னையின் மீது மோகம், ஆசை எல்லாம் சேர்ந்தும் பெரும் பணக்காரர்கள் அதிகமாக சம்பாதிக்கும் நோக்கில் வயல் வெளிகளை மாற்றி அடுக்குமாடியை கட்டிவிட்டார்கள்.  இது உடனே நடக்கவில்லை கடந்த நூறு வருடங்களாக நடக்கின்றது.

ஆனந்த கூவநதி சாக்கடையாக மாறிவிட்டது. வடிகாலாக இருந்த அடையாறு (எவ்வளவு ”அடை” மழையையும் தாங்கும் அடையாறு) இன்று கோபத்தில் கொந்தளித்துள்ளது.  இதற்கு காரணம் இன்றைய மக்கள் கிடையாது ஒருவன் ஒரு சுவற்றில் அசிங்கம் செய்யத்தொடங்கினால் போதும் அவனைத் தொடர்ந்து அடுத்த சந்ததியும்  தொடரும்.

35

அரசியல் வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.  அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை ஏரிகளும் குளங்களும் வாய்க்கால்களும் ஆறுகளும் காணாமற் போயின.   கட்டிடங்களாக மாறிவிட்டது.  என்றுமே பெய்யாத மழை திடீர் என்று பெய்த மழை இத்தனையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் இவ்வளவு நாளாக ”வெறும் 20 அடியிலே தண்ணீர் கிடைத்துவிடும்” என்று கூறி கூரு போட்டு விளை நிலத்தை விற்றுக்கொண்டிருந்தார்கள் இப்போது ” எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளமே வராது என்று ஒரு வார்த்தையும் சேர்த்துக்கொள்வார்களே தவிர அவர்களும் திருந்த மாட்டார்கள் .  எத்தளை விவசாய நிலங்கள் இவர்களால் அடியோடு அழிக்கப்பட்டு விட்டது.

மற்ற மாவட்டங்களுக்கும் இதே தகவல்தான் இயற்கையை ஏமாற்ற முடியாது அதற்கு ஏமாற்றவும் தெரியாது.   அதனால் தான் வெள்ளம் வந்தவுடன் அது தன் வழியில் கடலை நோக்கி பாய்கின்றது.  இரயில் தண்டவாளத்தில் ஏற்படும் வாகன விபத்துகளுக்கு இரயில் என்றாவது நின்று காரணம் சொல்லியிருக்கின்றதா இல்லை வழக்குதான் ஏற்றுக்கொள்ளப்படுமா.  ஏனென்றால் இரயில் தண்டவாளத்தில் தான் செல்லும் நீ ஏன் அங்கு சென்றாய் என்று தான் கேட்பார்கள். அதுபோல் வெள்ளத்தையும் மழையையும் குற்றம் சொல்ல முடியாது. நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.