சென்னை கனமழையில் பரிதாபமாக 18 பேர் இறந்த காரணம்

chennai-hos

இன்று சென்னையில் மணப்பாக்கத்தில் அடையாறுக்கு அருகில் அமைந்துள்ள (MIOT) தனியார் மருத்துவமனையில் மழையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு முதல் தளத்திலும் மேல் தளத்திலும் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் 18 பேர் பரிதாபமாக வெள்ளத்திற்கு பலியாகினர்.

35

இறந்த பிள்ளையை கட்டியணைத்து அழும் பெற்றோர்

எதனால் உயிரிழந்தார் என்று விசாரனை செய்கையில் நெஞ்சம் உருகும் வகையில் அவர்கள் பரிதாபமாக கூறினார்கள். ” கடந்த ஒரு மாதமாக மூன்று மாவட்டங்களில் பெய்த மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது மேலும் ஒரு வாரமாக பெய்த பலத்த மழையில் ஏரி நிரம்பி வர ஆரம்பித்தது.  மேலும் தண்ணீரை தேக்கினால் ஏரி கண்டிப்பாக உடைந்து விடும் என்பதால் முழு வேகத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது முன்னறிவிப்பின்றி செய்த காரியத்தால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரையோரம் இருந்த குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவைகள் வெள்ளத்தில் பலியாகின.

மேலும் மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது.  உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  ஒருங்கிணைந்த ஆக்ஸிஜன் அமைப்பினைக் கொண்டு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது ஆனால் மின் இணைப்பு துண்டித்ததால் ஆக்ஸிஜன் தடைபட்டது தரை தளத்தில் உள்ள நோயாளிகளை மேல் தளத்திற்கு கொண்டு வருவதற்குள் 5 நிமிடத்தில் தரை தளமும் முழ்கிவிட்டது.  இதில் ஜெனரேட்டர்கள் முழ்கி செயலிழந்தது.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உதவியாளர்கள் நீந்தி எடுத்து வந்து கொடுப்பதற்குள் தண்ணீர் முதல் தளத்தையும் விஞ்சி விட்டது. இனிமேல் சிலிண்டர்களை எடுக்க முடியாத என்று கைவிட்ட நிலையில் ஆக்ஸிஜனை பெற்றுக் கொண்டிருந்த நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

பதினெட்டு பேர் இறந்த போயினர்.  மீதமுள்ளவர்கள் இரண்டாம் தளத்தில் வைக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இறந்தவர்களில் 4 பேர்களை பெற்றோர்கள் மற்றும உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

மீதமுள்ள 14 பேர்களை அரசு சவக்கிடங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இது போல் பரிதாபம் வேறு எப்போதும் சென்னையில் நடக்கக்கூடாது தண்ணீர் திறந்துவிடும் முன் எச்சரிக்கை செய்து இருந்தால் கூட உயிர்களை காப்பாற்றி கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.