இதய அடைப்பிற்கு இதமான காய்கறிகள்

fruit vegetable isolated on white

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் இருதய அடைப்பு ஏற்பட காரணமாகிறது.  இது மாரடைப்புக்கு வழி வகுக்கிறது.  கடைசியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்க்கிறது.

இந்த இருதய அடைப்பை தகர்க்க முடியாதா?  முடியும்.  இருதய அடைப்பை காய்கறிகள் மற்றும் பழங்கள் உண்பதன்மூலம் தகர்க்கச் செய்கின்றன.

இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்து விடமுடியும்.

காரட்.

தினந்தோறும் காரட்டை பச்சையாக அப்படியே சாப்பிடுங்கள்.  காரட்டை மிகுதியாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதனால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

முட்டைக்கோசு.

மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்.

ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்தசோகை நோய் வராது.  இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்டராலைக் குறைக்கிறது.

இஞ்சி.

கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள்.  இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவை தடுக்கிறது.  மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.  இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.  வாய்வு அவஸ்தையை போக்குகிறது.  மூட்டு வலியை குறைக்கிறது.

வெங்காயம்.

வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.  இரத்தத்தின் உறை தன்மையும் ஒட்டுத் தன்மையும் குறைகிறது.  இதனால் மாரடைப்பு நோய் வராது.  மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என பல ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் படிப்படியாக இருதய இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்து விடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்.

ஆப்பிளில் உள்ள ”பெக்டின்” என்ற நார்ச்சத்து இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது என்று ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15சதவிகிதம் வரை குறைந்து விடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது.

அன்னாசி.

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகிறது.  மற்றும் அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளையும் நீக்குகிறது.

எலுமிச்சம்பழம்.

உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களான எலுமிச்சையில் உள்ள சத்துக்களை உறுதிப்படுத்துகிறது.  சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.  எலுமிச்சம்பழத்தில் ”பெக்டின்” சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

பூண்டு

இதில் சாலிசிலிக் என்ற இராசாயனப் பொருள் உள்ளது.  நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சோ்த்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள ”சாலிசிலிக்” என்ற சத்து அந்த அடைப்பை உடைத்து விடுகிறது.  தாமரைப்பூவிலும் இச் சக்தி உள்ளது.

சுரைக்காய்.

இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை அகற்றுவதில் சுரைக்காயின் பங்கு மிக அதிகம்.  சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200மி.லி. வீதம் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்.

இயற்கை அன்னை நமக்கு கொடுத்த அற்புதமான காய்.  வெள்ளரிக்காய்.  இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டை வெகுவாக குறைக்கிறது.  இதயத்தின் செயல்பாட்டை சுறுசுறுப்பாகிறது.  இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை அழிப்பதில் வெள்ளரிக்காய்க்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி.

இதயத்தை குளிரச் செய்கிறது.

இரத்தக் குழாய்களின் அடைப்புகளை போக்குகிறது.

இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்,

இந்த காய்கறிகளை தினசரி காலையில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்கள் 80 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிடும்.  ஆனால் தினந்தோறும் சாப்பிட்டு வரவேண்டும்.

எனவே காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு தாக்காத வண்ணம் இன்புற்று வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published.