ஆண்களின் இளமைக்கு இரகசியம்

b8781c1191c42fa069f77ec4684a4bce

அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் தான் சீக்கிரத்தில் முதுமையை அடைந்துவிடுகின்றனர். சில ஆண்களுக்கு 50 வயதானாலும் முடி நரைத்துப் போனாலும் அவர்களது சருமம் மற்றும் உடல்வாகு இளமைப் போல் எப்போதும் தோற்றம் கொடுத்துக்கொண்டு இருக்கும்.

இதன் காரணம் ஆண்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் உடல்வாகு தான் காரணம். ஆண்களின் சருமம் பெண்களைக் காட்டிலும் வலுவானது நிறைய பாதிப்புகளை தாங்கும்.  அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்கும்.

மேலும் இதைப்பயன்படுத்தி ஆண்களின் அழகினை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

1. பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் முன்பு கூறினவாறு வலுவானது ஆனால் வயது ஆக ஆக சல ஆண்களின் சருமத்தில் உள்ள கொலாஜன் எனும் புரதம் குறைந்து விடுகின்றது இதனால் சுருக்கம் அதிகமாகிவிடும்  இந்த கொலாஜன் குறைவது இயற்கைதான் என்றாலும் ஒரு சில  கெட்ட பழக்கங்களால் சீக்கரமெ கொலாஜன் குறைந்து விடுகின்றது.

2. தொடர்ந்து ஷேவிங் செய்து வருவதால் கண்ணங்களில் உள்ள கொலாஜன் சீக்கிரமாக குறைந்துவிடும். சவரம் செய்யும் போது மறக்காமல் ஈரப்பதமுள்ள கீரீம் பயன்படுத்தவும். முடிந்த வரை டிரிம் செய்து விடுவது நல்லது.

3. ஆண்கள் உடல் உயிரணுக்களை உற்பத்தி செய்வதால் எப்போதும் வெப்பமாக இருக்கும் எனவே முடிந்தவரை குளிர்ச்சியான உணவுகளை அதிகம் உண்ணுதல் வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவைகளை உண்ண வேண்டும்.  இறைச்சியை குறைத்துக்கொண்டு மீன் போன்ற கடல் உயிரினங்களை சாப்பிட்டால் விட்டமின்கள் அதிகரிக்கும்.

4. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பற்கள் மற்றும் தொண்டைப்பகுதிகளில் தாக்கி கேடு விளைவிக்கும். மேலும் நிகோடின் என்ற பொருள் காற்றில் கலந்து நுரையீரல் மற்றும் தோலில் ஒரு வித அலற்சியை உருவாக்கி விடும்.  இதனால் புகைப்பழக்கம் உள்ளவர்கள் சீக்கிரமாக முதுமையை அடைந்து விடுவார்கள்.

5. குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் ஆல்கஹால் கலந்து இரத்தத்தை அசுத்தமாக்கி விடும். இதனால் உடல் கருமை நிறத்திற்கு மாறிவிடும்.

6. ஆண்கள் தவறாமல் உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சி, குளிர்ச்சி மற்றும் பாதுகாப்பான உறவுகள் மூலம் தனது இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம்.

7. தினமும் நெல்லிக் கனி அல்லது திரிபலா சூரணத்தை தின்று வரவும். இதனால் மூப்பு தள்ளி வைக்கப்படும்.

8. ஒரு ஆண் குறைந்தது 8 மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும்.  அவ்வாறு தூங்கினால் நிம்மதியாக இருப்பார்கள் அடுத்த நாள் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.

9. ஆண்களுக்கு குடும்பம், உறவுகள், பிள்ளைகள் மற்றும் தொழில் பற்றி கவலை இருந்து கொண்டே தான் இருக்கும் இதனால் முடி கூட கொட்டி விடுகின்றது.  எனவே அனைத்து கவலைகளையும் மறந்து நிம்மதியாக இருத்தல் வேண்டும்.  இதனால் இதய வலி, சர்க்கரை போன்ற எந்த நோய்களும் சீண்டாது……

Leave a Reply

Your email address will not be published.