ஓட்ஸ் ஒரு சிறந்த உணவு

oats

வாழ்க்கை என்றால் நோய்களும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும்..  இருந்தாலும் எப்போதும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.  இது உண்மையிலே நடக்கிற காரியமா? என்று பார்த்தால் நடக்கிற காரியம் தான் என்று கடந்த 200 ஆண்டுகளாக சீனர்கள் நிரூபித்துள்ளனர்.

இதெற்கெல்லாம் ஓரே தீர்வு, ஓட்ஸ் சாப்பிடுவதுதான்.  ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன. நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உயரும் உடல் அம்சங்கள், கொழுத்த சரீரம், உயர் இரத்தக் கொலஸ்ட்ரால், (இது ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்துகிறது) புற்று நோய் முதலிய நோய்களையும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இல்லாதத் தன்மைகளையும் கொஞ்சமும் குறைபாடுகள் இல்லாமல் ஓட்ஸ் அனைத்தையும் குணப்படுத்தி விடுகிறது.

மனித மூளையில் விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு இருக்கிறது.  இது ஒழுங்காக இயங்கினால் போதும்.  ஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு வராது.  அதற்கு எளிய உணவு மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ” அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி ” என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது.  ”லிபிடோ” என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கி விடுகிறது.  எதிர்காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக தீர்த்து வைத்து விடுகிறது. காணணம் என்ன?  ஓட்ஸில் உள்ள மருத்துவக் குணம் உடலில் தொற்று நோய் படுவுவதை தடுக்கிறது.  தமனி இறுக்கம் குறைந்து மூச்சு விடுவதில் சிரமத்தை குறைக்கிறது.  உடல் பலவீனத்தை குறைக்கிறது.  திசுக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.  லிபிடோவை அதிகரிக்கச் செய்கிறது.  ஆதலால் உற்சாகமாக வாழ தயாராகி விடுகின்றனர். இத் தன்மை ஓட்ஸ் உணவில் நேரடியாகக் கிடைக்கிறது.

11,12ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள்.  அதன்பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.  சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த பண்டைய மக்களே ஓட்ஸ் சாப்பிடுவதை தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.  இன்றும் உலகில் சுவிஸ் மக்கள்தான் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறார்கள்.  சுவிஸ்மக்கள் ஆனந்தமாக இருக்கின்றனர்.  ஆரோக்கியமாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதிகம் சம்பாதிக்கிறார்கள்.  சேமிப்புடன் வாழ்கிறார்கள்.  இதற்கு காரணம் உற்சாகம் கொடுக்கும் ஓட்ஸ் உணவு தான்.

குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல, மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தை சிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பது வரை கண்டுபிடித்துள்ளனர்.  அதனால்தான் இவர்கள் செயல் நோக்குடன் தொடர்ந்து வாழ்கின்றனர்.  ஆகவே ஓட்ஸ்மீல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுங்கள்.

குளங்களில் மீ்ன் வளர்ப்பவர்கள் ஓட்ஸ்சை அதிக அளவில் உணவாகப் போட்டால் அதிகமான மீன்கள் கிடைக்கும்.  பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் வெங்காயத்தை பச்சையாக சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடவும்.  இதனால் கோபமும் கவலையும் பறந்து போகும்.

ஓட்ஸ் இளமை காக்கிறது.  ஓட்ஸ் பல நன்மைகளை தருகிறது.  தினமும் ஒரு வேளை உணவில் சேர்க்க இன்றே முடிவு செய்யுங்கள்.  நோயின்றி ஆரோக்கியமாக வாழப் பழகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.