கோலா பானத்தில் உள்ள நச்சு

downloadsss

குளிர் பானங்களைப் பருகுவோர் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே போகின்றது.  இயற்கை ரசங்கள் கூட கெமிக்கல் மற்றும் எசன்ஸ் வழியாக வந்துவிட்டது கோக் கோலா மற்றும் பெப்சி தயாரிக்கும் குளிர்பானங்களை குடிக்கின்றோம்.  தமிழகத்தில் கோலி சோடா மறைந்தே விட்டது.  அந்த காலத்தில் வயிற்று வலி மற்றும் செரிமானம் ஆக வில்லை என்றால் ஒரு சோடா குடித்தால் போதும் சரியாகிவிடும்.  அது பன்னீர் சோடாவாக மாறியது.  பன்னீர் சோடாவில் கருப்பு ஆரஞ்சு கலக்கப்பட்டு சுவை சேர்க்கப்பட்டது. பின் மதுவில் கலக்கி குடிக்க ஏதுவாக கோக் சோடாவாக மாறியது.  இப்படி பல பரிணாமங்களை அடைந்து இறுதியில் உருவானது கோக் கோலா….

இதைத் தொடர்ந்து இதன் போட்டி நிறுவனங்களும் தொடங்கியது இப்படியே இந்த நிறுவனத்தின் பெயரைக் கொண்டு நிறைய குளிர்பானங்கள் வித விதமாக உருவாகிவிட்டது.  தண்ணீரையும் இவர்கள் தான் தயாரிக்கின்றனர்.

இந்த பானங்கள் உண்மையில் களைப்பை நீக்குவது கிடையாது.  எல்லாம் மனிதன் மனசு தான் காரணம். களைப்பாக இருக்கும் போது தண்ணீர் குடித்தாலே போதும் அல்லது குளிர்ந்த பானை நீரில் எலுமிச்சை சாற்றினையும் சர்க்கரையும் கலந்து குடித்தாலே போதும் ஆனால் அவ்வாறு செய்யாமல்.  காசு குடுத்து கோக் வாங்கி சாப்பிடுவதால் அதன் வேதிப்பொருட்கள் நம் வயிற்றில் சென்று தங்கிவிடுகின்றன.

ஒரு கோழி முட்டையை முழுவதுமாக கோக்கில் ஊற வைத்தால் அதன் மேற்பாகம் அரித்துவிடுமாம்.  அந்த கோழி முட்டைதான் நம் பற்கள் எலும்புகள்.  தினமும் இவற்றை சாப்பிடுவதால் பெரும்பாலும் பல் அரிமானம் வயிறு அரிமானம் ஆகியவை ஏற்படுகின்றன.

இந்த பானத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் ஏகப்பட்டவைகள் உள்ளன.  இதனால் உடலில் இன்சுலின் அதிகமாக சுரந்து விடும்.  எதுவுமே அளவாக இருத்தல் வேண்டும்.  குளிர்பானப்பிரியர்கள் திடீர் என்று மாறுவது கடினம் தான் என்ன செய்ய கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட வேண்டும்.  இல்லையேல் பற்களை இழந்தும் வயிற்று வலியைத்தாங்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.