வீட்டில் உள்ள பொருட்களை கவனியுங்கள் ஆபத்தை தவிருங்கள்

imagesss

நாம் சில சமயம் அஜாக்கிரதையாக இருந்து விடுகின்றோம் அதனால் இழப்புகள் அதிகமாகின்றன. இந்த காரணத்தால் நிறைய சமயம் ஆபத்து நடக்கின்றது.  இதனால் தினம் தோறும் நமது வீட்டில் சில விசயங்களை கவனிக்க வேண்டும்.  வீடு கட்டும்போதோ அல்லது வீட்டுக்கு குடிவந்த பிறகோ வாங்கிய சில பொருட்களை நாம் தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம் ஆனால் அதன் பழுது நமக்கு தெரியாமல் போகின்றது இதனால் பெரிய விபத்துக்கள் வந்துவிடுகின்றது.

மின்விசிறி

மின்விசிறியை வீடு கட்டும் போதோ அல்லது வீடு குடிவந்த பிறகோ விலையுயர்ந்த அல்லது பட்ஜட் விலையில் வாங்கி மேலே மாட்டி விடுகின்றோம்.  அந்த மின்விசிறி தினம் தோறும் சுற்றுகின்றது. அது சீலிங்கில் மாட்டியுள்ள கொக்கியில் உள்ள நட்டுக்கும் மின்விசிறிக்கும் இடையே சிறிய ரப்பர் போன்று இருக்கும்.  இது நட்டின் தேய்மானத்தை தவர்க்கும் நாளடைவில் ரப்பர் தேய்ந்து விடும் அல்லது ஒதுங்கி விடும். இதனால் மின்விசிறி ஆன் செய்யும் போது டக் என்று சத்தம் கேட்கும்.  பேனை வேகமாக போடும் போது காற்று கீழ் நோக்கி தள்ளப்படுவதால் மேல் நோக்கி பேன் தள்ளப்படும்.  பேன் ஆப் செய்யப்படும் போது மீண்டும் பழைய நிலைக்கு வரும். இதனால் நட்டு தேய்மானம்  ஆகும். இதை கவனத்தில் கொண்டு கண்டிப்பாக ரப்பரை நீக்கி விட்டு புதிய ரப்பர் போடவும்.

டியூப் லைட்

டியூப் லைட்டில் சத்தம் வந்தால் அது பாழ் ஆகிக்கொண்டிருக்கின்றது என்று அர்த்தம் சில காயில் கள் வெடித்து விடும் அதனால் உடனே அதன் சோக்கை மாற்றிவிடவும்.  இல்லையேல் புது லைட்டை மாட்டிவிடவும்.

கேஸ் அடுப்பு

தினம் தோறும் அடுப்பு வேலைகள் முடிந்த பின்பு பர்னரை கிளீன் செய்து விட வேண்டும். இல்லையேல் மாசு படிந்து விடும்.  பாலை பொங்கி வழியும் வரை கொதிக்க வேண்டாம் இது அடுப்பில் உள்ள ஜெட் என்ற துளையை அடைத்துக் கொள்ளும் அல்லது பெரிதாக்கிவிடும் இதனால் அதிக கேஸ் வெளிவரும்.  தினமும் இரவு ரெகுலேட்டர் ஆப் செய்யப்பட வேண்டும்.  ஒரு வருடத்திற்கு ஒரு முறை கேஸ் டியூப் மாற்றப்பட வேண்டும்.  பழைய பச்சைக் கலர் டியுப் மாற்றப்பட வேண்டும்.  சிம்மில் வைத்து அடுப்பை பற்ற வைக்க வேண்டும். ஏனெனில் லைட்டர் சில சமயம் அடிக்காது.  அப்போது நாம் மறந்துவிட்டு தீப்பட்டியை தேடிச் சென்று விடுவோம். இதனால் கேஸ் அதிகமாக வெளிவந்து பாதிப்பை தரும்.  ஜன்னல் எப்போதும் திறந்து இருக்கவேண்டும்.

மின்சாரம்

ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் முறையாக கையாள வேண்டும் சரியான சர்கியூட் பிரேக்கர்கள் பாத்ரூம் முதற்கொண்டு வைத்திருக்கவேண்டும்.

கொசுவர்த்திகள்

கொசுவர்த்திகள் பொதுவாக லிக்கியூட் எல்லோருடைய வீட்டிலும் இருக்கும்.  இது தூங்கும் போது போடுவதை விட இரவில் தூங்குவதற்கு முன்னர் போட்டுவிட்டு கொசுவை விரட்டிவிட்டு பின் ஆப் செய்துவிட்டு ஜன்னலை சாத்தி விடலாம். இது உடலை அசதிபட வைத்துவிடும்.  Expiry  ஆன மருந்துகளை (லிக்கியூட்) கொசுவர்த்தியில் பயன்படுத்த வேண்டாம்  இது விஷமாக மாறிவிடும்.  கொசுவலைகளை உபயோகிப்பது தான் சிறந்த வழி.

TV-AC-பிரிட்ஜ்

டிவி மற்றும் பிரிட்ஜ் உபயோகத்தின் போது ஆப் செய்தபின் உடனே ஆன் செய்ய வேண்டாம் இதனால் கெட்டுவிடும் லோ வோல்டேஜ்ல் எந்த காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம் கண்டிப்பாக ஸ்டெப்ளஸர்கள் பயன்படுத்த வேண்டும்.

பைக்-கார்-வாகனங்கள்

தினமும் வாகனங்கள் தலைக்கவசம் ஓட்டுநர் உரிமம் மற்றும் பெட்ரோல் செக் செய்து வண்டியை ஒட்டவும் முன் பின் தெரியாதவர்களை வண்டியில் ஏற்றவேண்டும்.  காரில் லிப்ட் தரும் போது முன் சீட்டில் அமர வைக்கவும் பின் சீட்டில் வேண்டாம். பெண்கள் தனியாக போகும் போது செல்போனை ஆன் செய்து பெற்றோருடன் பேசிக் கொண்டே செல்ல வேண்டும் இது பெண்களின் பாதுகாப்புக்கு.

Leave a Reply

Your email address will not be published.