கலரைப்பார்த்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க

square-marks-toothpaste-hoax

Facebook ல் சமீப காலமாக ஒரு செய்தி வெளிவருகின்றது. அது பற்பசை வாங்கும்போது அந்த பேஸ்டின் டியூப்புக் அடிப்பகுதியில் உள்ள கலர் பாரின் கலரைப் பொறுத்து அது இயற்கையா அல்லது செயற்கை கெமிக்கல்கள் கலந்துள்ளனவா என தெரியும் என்று கூறுகின்றார்கள் ஆனால் உண்மை அது வல்ல.

டூத் பேஸ்டின் டியூப் மட்டுமல்ல மருந்துகள் மற்றும் பெவிக்கால் போன்ற கம் டியூப்கள் போன்றவற்றில் கூட அந்த பார் காணப்படும்.

இது டியூப் உருவாக்கப்படும் இயந்திரத்தில் உருவாக்கப்படும் போது அந்த டியூப் என்ன கலர் மற்றும் அதை எங்கு மடக்க வேண்டும் எந்த இடத்தில் வெட்ட வேண்டும் என்ற தேவையான தகவலுக்காக தான் அந்த கோடுகள் உள்ளன்.

அதை விட்டு விட்டு கருப்பாக இருந்தால் கெமிக்கல், சிவப்பாக இருந்தால் இயற்கை என்றெல்லாம் கிடையாது.  டூத் பேஸ்ட் என்றாலே அது கெமிக்கல் இல்லாமல் தயாரிக்க முடியாது.  இயற்கையான மூலிகைகளான கிராம்பு, புதினா, வேம்பு, உப்பு ஆகியவைற்றை வெறுமனே அரைத்து ஒரு டியூப்பில் வைத்தால் இரண்டு நாட்களில் புழு புழுத்துவிடும்.  இனிமேல் செய்திகள் உண்மைத் தன்மை ஆராய்ந்து விட்டு ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.