திராட்சை பழம் குடல்புண், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்றது.

images (100)

திராட்சைப்பழத்தில் உள்ள டார்டாரிக் ஆசிட் மிகவும் தேவையானது நமது வயிற்றுக்கு.  அந்த அமிலமானது வயிற்றில் ஏற்பட்டுள்ள வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும்.  திராட்சை அருமையான பழம்.  இந்த பழவகைகள் முக்கியமாக  குளிர் காலத்தில் சாப்பிட ஏற்றதல்ல என்று கூறுகின்றார்கள்.  ஆனால் அது தவறு கருப்புத் திராட்சை மிக சத்துள்ளது. இதைப்பயன்படுத்தி நிறைய மருத்துவங்கள் செய்யப்படுகின்றன.

உலர்திராட்சை பழ திராட்சையை விட அதிக சத்துள்ளது. விட்டமின்கள் பொட்டாசியம் கால்சியம் என்று இதன் பலன்கள் மிக அதிகம்.  கல்லீரல் நோய்கள், வயிற்று நோய்கள் மற்றும் வயிறு சார்ந்த நோய்களுக்கு தினமும் கருந்திராட்சை சாற்றினை குடித்தால் போதுமானது.

திராட்சை சாற்றை தினமும் காலையில் குடித்து வந்தால் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெகு நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு திராட்சை சாற்றில் தேன் கலந்து கொடுக்கு அவருக்கு உடல் பலம் தேறி வரும்.

திராட்சையை சாறு பிழிந்த பின்பு அதன் சக்கையை அரைத்து முகத்தில் மாஸ்க் போன்று தடவிவைத்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

தினமும் திராட்சை உண்பது என்பது முடியாத காரியம் தான் ஆனால் உலர் திராட்சை வாங்கி அதை ஊற வைத்து பின் சாப்பிட்டு வந்தால் போதுமானது.  தினமும் இரவில் பத்து திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.