முதுகு தண்டில் ஏற்படும் வலிகள்

images (99)

உடலைத்தாங்கி நிற்பதே முதுகு தண்டு தான் முதுகு தண்டு வளையும் தன்மையுடையது எனவே அது வளைந்து நெளிந்து செயல்படவேண்டும்.  ஒரே இடத்தில் படுத்திருப்பதாலும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது மற்றும் நெடு தூரப்பயணம் கணினி வேலைகள் என்று நிறைய அசையாத செயல்களினால் தான் முதுகு வலி ஏற்பட்டு தொந்தரவு செய்கின்றது.

முதுகு வலி நீங்க கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றிக்கொள்ளுங்கள்

1. தினமும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு இடப்பக்கம் வலப்பக்கம் 20 தடவை செய்யவேண்டும்

2. காலையில் 20 தடவை தினமும் குனிந்து நிமிரவேண்டும்.

3. சாதரணமாக நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

4. போர்வையில் சுருண்டு படுக்காதீர்கள்।

5.  பஞ்சணை போன்ற தலையணையை வைத்து தூங்குங்கள்.

6.  தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்.

7. ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்காராதீர்கள்.

8. வாகனங்களை ஒட்டும்போது அகலமாக பிடித்துக்கொண்டு குனியாமல் ஓட்டுங்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது இடுப்பைச் சுற்றி துண்டு கட்டிக்கொள்ளுங்கள்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை நீட்டிமடக்கி பயிற்சி செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.