வந்தாச்சு ஆன்டிராய்டு ஹெல்த் ஆப்ஸ்

download (3)

நாம் பரவலாக பயன்படுத்தி வரும் ஆன்டிராய்டு போனில் நிறைய ஆப்ஸ்கள் உருவாக்கப்படுகின்றது.  அந்த வகை ஆப்ஸ்கள் விளையாடவும் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இப்போது உடல்நிலை சம்பந்தமாக பொதுவான ஆப்ஸ்கள் உருவாக்கப்பட்டு இயங்கு கின்றது.

அதில் சில.

PEDO Meter

இந்த அப்ளிகேஸன்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டது.  நாம் தினமும் 10000 அடிகளை ஒரு நாளைக்கு எடுத்து வைக்கவேண்டுமாம் ஆனால் நாம் சாரசரியாக 1000 அடிகள் கூட பயன்படுத்துவது கிடையாது இதற்காக தினமும் நடைபயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.  இந்த பயனீடு நாம் தினமும் நடக்கும் பாத அடிகளை எண்ணுகின்றது.

இந்த பாத எண்ணிக்கைகளை எண்ணுவதற்கு பிரத்யேகமான வாட்சு மற்றும் ஷூக்கள் தேவையில்லை.  இந்த ஆப்ஸ்கள் தினமும் பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படுகின்றது.

Period Tracker

பீரியட் டிராக்கர் என்ற மென்பொருள் ஆன்டிராய்டு ஆப்ஸ் களில் பயன்படுத்து வருகின்றது இது பெண்களுக்கான மாதவிடாய் காலங்களில் எச்சரிக்கை செய்யவும் அறிவிப்புகளைத்தரவும் பயன்படுகின்றது.

மேலும் குழந்தை தரித்த காலத்தில் இருந்த தோராயமாக குழந்தை பெற்றெடுக்கும் நாள் வரை உள்ள நாட்களைக் கணக்கிட்டு கூறுகின்றது.

இது போன்ற நிறைய ஹெல்த் ஆப்ஸ்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.