வெங்காயம் சிறந்த மருத்துவ குணங்கள்.

onion

வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் என்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்

 1. உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
 2. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அத்துடன் சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்து போகும்.  பித்த ஏப்பமும் மறைந்து போகும்.
 3. வெங்காயச்சாறு சாப்பிட்டுவர வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
 4. வெங்காயப் பூ, வெங்காயத்தை சமைத்து சாப்பிட, உடல் உஷ்ணநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
 5. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
 6. சின்ன வெங்காயச்சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
 7. வெங்காயத்தை தினந்தோறும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
 8. வாத நோய் நீங்க, வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர வேண்டும்.
 9. ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி தண்ணீரில் கலந்து பருகிவர சிறுநீர்க் கடுப்பு, எரிச்சல் தீரும்.
 10. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
 11. முகப்பரு உள்ள இடத்தில் நறுக்கிய வெங்காயத்தை தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
 12. சின்ன வெங்காயத்தை கசக்கி வழுக்கை விழுந்த தலையில் தேய்த்து வந்தால் முடிகள் வளர ஆரம்கக்கின்றது. கூடவே சொட்டு தே.எண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.