கழுத்து கருப்பு நீங்க

images (93)

சிலர் என்ன தான் சிகப்பாக இருந்தாலும் பின் கழுத்து மற்றும் கழுத்தைச் சுற்றி கருவளையம் தோன்றி அழகைக் கெடுக்கும்.  இதன் காரணம் குளிக்கும் போது கழுத்தை நன்றாக தேய்த்துக் குளிக்காததாலும் மற்றும் நகை அணிவதாலும் தான்.

எண்ணை தலையில் இருந்து வழிந்து கழுத்துப்பகுதியில் சுற்றி நிற்கும் நாம் குளிக்கும்போது தினமும் கழுத்தை தினமும் தேய்க்காமல் விடுவதால் தினமும் அழுக்கு படிந்து நாளடைவில் கருமையாக மாறிவிடுகின்றது.

முகத்திலும் கண்களிலும் கூட இத்தகைய கருமைகள் தோன்றிவிடுகின்றது.  இதை மறைக்க உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து கழுத்தை சுற்றி போட வேண்டும் இதேப் போல் முகத்திலும் போட வேண்டும் இதனால் கருமை நீங்கிவிடும்.

கோதுமை மாவில் சிறிது வெண்ணையை கலந்து அதை நன்றாக பிசைந்தெடுத்து பின் கழுத்தில் தடவி காயவிடவும் தினமும் இது போல் செய்து வர கழுத்தில் உள்ள அழுக்கு தோலை விட்டு நீங்கி கருமை நீங்க கழுத்து அழகாகும்.

நல்லெண்ணையை சிறிது சூடாக்கி கழுத்துப் பகுதியில் தேய்த்தாலும் கருமை மறைந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.