நகம் பாதுகாப்பு முறைகள்

toenail-fungus-early-stages

நகங்களை பாதுகாக்கவேண்டும் தானாக வளரும் என்றாவது கவலையோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போதோ நகத்தை கடித்து துப்பிவிடுவோம். இவ்வளவு தான் நகப்பராமரிப்பு.  மேலும் எங்காவது நகப்பாலீஷ் பார்த்தால் உடனே எடுத்து வைத்துவிடுவோம்.

ஆனால் நகமும் நமது கைவிரலுக்கு முக்கியமான ஒன்று அழகுக்காக அவைகள் படைக்கப்பட்டதில்லை தினமும் நகத்தினை பராமரித்தல் வேண்டும். ஒவ்வொரு விலங்குக்கும் நகம் ஒரு வேலையை செய்கின்றது அதே போல் மனிதனுக்கும் ஒரு வேலை செய்கின்றது.  பழத்தை உரிக்க.  தையல் தைக்க, பஞ்சு நூல் கோற்க. இப்படி நிறைய.  பெண்களுக்கு பாதுகாப்பே நகம் தான்.

விரல் நகங்கள் பிங்க் நிறத்தில் இருக்கவேண்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தாலோ அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தாலோ மஞ்சள் காமாலை என்று அர்த்தம்.   நகம் சில பேருக்கு சொத்தை ஆகி விடுகின்றது இதைக் கவனிக்கவேண்டும் உடலில் இரத்தம் கெட்டுப்போனால் தான் நகம் சொத்தையாகும்.

இவ்வாறு சொத்தை ஆகாமல் தடுக்க கை மற்றும் கால் விரல்களை தினமும் குளிக்கும் போது நன்றாக தேய்க்கவேண்டும் ஷூக்கள் மற்றும் செப்பல்கள் அணிந்து கொண்டு தான் செல்லவேண்டும். குறிப்பாக கால் நகங்களை அறவே வெட்டிவிடவேண்டும் நடக்கும் போது கல் இடறி நகம் பெயர்ந்துக் கொண்டு புண் வந்தால் அந்தப் புண் வழியே தொற்றுக் கிருமிகள் வந்துவிடும்.  அப்படி புண் ஏற்பட்டால் பேண்டேஜ் போட்டு பாதுகாக்கவும்.

கை நகங்களை வெட்டிவிடவும் அல்லது தினமும் அழுக்கு எடுத்து வைத்துக்கொள்ளவும். கைகள் மற்றும் நகங்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மருதாணி வைத்து விடவும். இதனால் குளிர்ச்சி கிடைக்கும் நகத்திற்கு அழகாகவும் இருக்கும்.

நகப்பாலீஷ் தடவுவதால் உணவுண்ணும்போது நகத்தில் உள்ள சாயம் கரைந்து  வயிற்றுக்கு சென்றுவிடும். இதனால் வயிற்று வலி ஏற்பட்டு அவதியுறச்செய்யும்.

விரல் சுற்றி வருவதற்கு முக்கிய காரணம் விரல் நகம் சுத்தமில்லாதது தான் அவ்வாறு வந்துவிட்டால் எலுமிச்சை பழத்தை ஒட்டையிட்டு விரலில் சொருகிவிடவும். சாப்பிடும் கரத்தில் நகம் வளர்க்க வேண்டாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.